வடிவேலுவின் விசுவாசியாக மாறிய இயக்குநர்

Bookmark and Share

வடிவேலுவின் விசுவாசியாக மாறிய இயக்குநர்

கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததால் படத்துறையினரால் ஓரங்கட்டப்பட்டார் வடிவேலு. அதன் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நடித்து வெளிவந்த படம் - 'தெனாலிராமன்'.

மன்னர் காலத்து கதையம்சத்தைக் கொண்ட இந்த நகைச்சுவை படத்தை சிம்புதேவனின் உதவியாளரும் பட்டா பட்டி என் படத்தை இயக்கியவருமான யுவராஜ் தயாளன் இயக்கியிருந்தார்.

கதை திரைக்கதை தொடங்கி எதுவுமே ரசிகர்களை கவரவில்லை. நகைச்சுவையும் எடுபடவில்லை. வடிவேலுவின் ஹீரோ ஆசையை தீர்த்துக்கொள்ள எடுக்கப்பட்ட படமாக இருந்ததால் தெனாலிராமன் படம் படு தோல்வியடைந்தது.

ஆனாலும் மீண்டும் யுவராஜையே தனது 'எலி' படத்திற்கும் இயக்குனர் ஆக்கினார் வடிவேலு. காரணம்... வடிவேலுவே இயக்குநராக மாறி டைரக்ட் பண்ணும்போது யுவராஜ் ஒரு ஓரமாக நிற்பார்.

எனவே வடிவேலுவுக்கும் யுவராஜுக்கும் நல்ல புரிதல் ஏற்பட்டுவிட்டது. தனது விசுவாசியாகவே மாறிவிட்ட யுவராஜிடம்  தனக்கான இன்னொரு கதையையும் தயார் செய்யச் சொல்லியிருக்கிறாராம் வடிவேலு. 'எலி' க்கு அடுத்த படமாக, மீண்டும் யுவராஜுடன் இணைந்து ஒரு படம் செய்ய வேண்டும் என்பதுதான் வடிவேலுவின் திட்டமாம்.


Post your comment





Related News
ரூ.9 கோடி நஷ்ட ஈடு புகார்: வடிவேல் நடிக்க தடை
ரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது! இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்
விஜய் படத்தால் முக்கிய இடம் பெற்ற பிரபல நடிகர்! தெரியாத தகவல்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
மீண்டும் உங்கள் அழைப்புக்காக காத்திருக்கிறேன்: விஜய் பற்றி உருக்கமாக பேசிய சச்சின் பட நடிகர்
வடிவேலுக்கு தயாரிப்பாளர் சங்கம் வழங்கிய இறுதி கெடு
சுராஜ் இயக்கத்தில் போலீசாக நடிக்கும் விமல்
வடிவேலு, ரோபோ சங்கர், சூரிக்கு அப்பாவாக நடிக்கும் திண்டுக்கல் ஐ.லியோனி
30 வருட சினிமா வாழ்க்கை, சாதனை நாயகனான வடிவேலு - ஸ்பெஷல் தகவல்.!
அடக்கடவுளே வடிவேலுக்கு இப்படியொரு பிரச்சனையா? - வருத்தத்தில் ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions