விட்டதை பிடிக்கும் வடிவேலு!

Bookmark and Share

விட்டதை பிடிக்கும் வடிவேலு!

தெனாலிராமன் படத்துக்கு பிறகு காமெடியனாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வடிவேலு, சில படங்கள் முற்றுகையிட்டும் அந்த படங்களை ஏற்கவில்லை. காரணம் கேட்டவர்களிடம், ரீ-என்ட்ரியில் ஹீரோவாக ஜெயிக்க வேண்டும் என்றுதான் வந்தேன்.

ஆனால் தெனாலிராமன் ஏமாற்றி விட்டது. இந்த நேரத்தில் நான் காமெடிக்கு தாவினால், ஹீரோ வேசம் எடுபடாமல் போனதால் பயந்து போய் மீண்டும் வடிவேலு காமெடிக்கு வந்து விட்டதாக சொல்வார்கள்.

அதனால்தான் ஹீரோவாக நடித்து ஜெயித்த பிறகுதான் காமெடிக்கு வருவது என்று எடுத்த முடிவில் இப்போதும் உறுதியாக இருக்கும் நான், உடனடியாக எலி படத்தின் கதையை ரெடி பண்ணி ஹீரோ நாற்காலியில் அமர்ந்திருக்கிறேன்.

மேலும், இந்த படத்தில் இதுவரை பார்க்காத வித்தியாசமான வடிவேலுவையும்,வித்தியாசமான காமெடி காட்சிகளையும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். அந்த அளவுக்கு புதுமையான முறையில் யோசித்து இந்த படம் உருவாகி வருகிறது, அதனால் தெனாலிராமனில் தவற விட்ட வெற்றியை இந்த படத்தில் உறுதியாக பிடித்து விடுவேன் என்று கூறி வரும் வடிவேலு, மீண்டும் காமெடியனாக நடித்துதான் மார்க்கெட்டை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற நிலையில் நான் இல்லை.

இருப்பினும், தமிழக ரசிகர்களை சந்தோசப்படுத்த வேண்டும் என்ற கடமை எனக்கு இருக்கிறது. அதற்காகவே எலி படத்துக்கு பிறகு அவ்வப்போது காமெடியனாக நடிக்கவும் முடிவெடுத்திருக்கிறேன் என்றும் தனது நலம் விரும்பிகளிடம் கூறியுள்ளார் வடிவேலு.


Post your comment





Related News
ரூ.9 கோடி நஷ்ட ஈடு புகார்: வடிவேல் நடிக்க தடை
ரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது! இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்
விஜய் படத்தால் முக்கிய இடம் பெற்ற பிரபல நடிகர்! தெரியாத தகவல்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
மீண்டும் உங்கள் அழைப்புக்காக காத்திருக்கிறேன்: விஜய் பற்றி உருக்கமாக பேசிய சச்சின் பட நடிகர்
வடிவேலுக்கு தயாரிப்பாளர் சங்கம் வழங்கிய இறுதி கெடு
சுராஜ் இயக்கத்தில் போலீசாக நடிக்கும் விமல்
வடிவேலு, ரோபோ சங்கர், சூரிக்கு அப்பாவாக நடிக்கும் திண்டுக்கல் ஐ.லியோனி
30 வருட சினிமா வாழ்க்கை, சாதனை நாயகனான வடிவேலு - ஸ்பெஷல் தகவல்.!
அடக்கடவுளே வடிவேலுக்கு இப்படியொரு பிரச்சனையா? - வருத்தத்தில் ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions