எலி பிரஸ்மீட் ரத்தானது ஏன்.? - உண்மையை உடைத்த வடிவேலு

Bookmark and Share

எலி பிரஸ்மீட் ரத்தானது ஏன்.? - உண்மையை உடைத்த வடிவேலு

தமிழ் சினிமாவில் நம்பர்-1 காமெடியனாக வலம் வந்தவர் நடிகர் வடிவேலு. இடையில் அரசியல் உள்ளி்ட சில பல பிரச்னைகளால் சினிமாவை விட்டு சிலகாலம் ஒதுங்கியிருந்தவர், 'தெனாலிராமன்' படத்தின் மூலம் ரீ-என்ட்ரியானார்.

அந்தப்படம் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வெற்றி பெறவில்லை. இருந்தாலும் மீண்டும் அதே யுவராஜ் தயாளன் இயக்கத்தில், இப்போது 'எலி' என்ற படத்தில் நடித்துள்ளார். துப்பறியும் ஆய்வாளராக வடிவேலு இதில் நடித்துள்ளார்.

வடிவேலுவுக்கு ஜோடியாக சதா நடித்துள்ளார். முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து இப்படத்தை இயக்கி இருக்கிறார் யுவராஜ் தயாளன். தற்போது இப்படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் மே 11ம் தேதி, எலி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பை வைத்திருந்தார் வடிவேலு. ஆனால் இந்த சந்திப்பு திடீரென ரத்து செய்யப்பட்டது. அன்றைய தினம் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தது.

மேலும் அவர் இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். இதன் காரணமாக வடிவேலு தனது பிரஸ்மீட் நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால் வடிவேலு இதை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இதுப்பற்றி, வடிவேலு நம்மிடம் கூறியதாவது,

எலி படத்தின் டிரைலர் உருவாக தாமதமானதால் தான் பத்திரிகையாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. மற்றபடி வேறு எந்த காரணமும் இல்லை. அம்மா(ஜெயலலிதா) மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன்.

அவருடைய ரேஞ்சுக்கு எனது படத்தை ஒப்பிட்டு பேசுவதெல்லாம் சரியல்ல. மிகவும் கஷ்டப்பட்டு இந்தப்படத்தை எடுத்துள்ளோம். இதுபோன்று வீண் வதந்திகளை பரப்பி கெடுத்துவிடாதீர்கள் என்றார்.


Post your comment





Related News
ரூ.9 கோடி நஷ்ட ஈடு புகார்: வடிவேல் நடிக்க தடை
ரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது! இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்
விஜய் படத்தால் முக்கிய இடம் பெற்ற பிரபல நடிகர்! தெரியாத தகவல்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
மீண்டும் உங்கள் அழைப்புக்காக காத்திருக்கிறேன்: விஜய் பற்றி உருக்கமாக பேசிய சச்சின் பட நடிகர்
வடிவேலுக்கு தயாரிப்பாளர் சங்கம் வழங்கிய இறுதி கெடு
சுராஜ் இயக்கத்தில் போலீசாக நடிக்கும் விமல்
வடிவேலு, ரோபோ சங்கர், சூரிக்கு அப்பாவாக நடிக்கும் திண்டுக்கல் ஐ.லியோனி
30 வருட சினிமா வாழ்க்கை, சாதனை நாயகனான வடிவேலு - ஸ்பெஷல் தகவல்.!
அடக்கடவுளே வடிவேலுக்கு இப்படியொரு பிரச்சனையா? - வருத்தத்தில் ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions