சிங்கமுத்துவுக்கு எதிரான நில மோசடி வழக்கு: நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்த வடிவேலு!

Bookmark and Share

சிங்கமுத்துவுக்கு எதிரான நில மோசடி வழக்கு: நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்த வடிவேலு!

காமெடி நடிகர் சிங்கமுத்துவுக்கு எதிராக நடிகர் வடிவேலு நில மோசடி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், சென்னையை அடுத்துள்ள படப்பையில் தனக்கு சொந்தமான 3.52 ஏக்கர் நிலத்தை நல்ல விலைக்கு விற்றுத் தருவதாக கூறி, பவர் ஆஃப் அட்டார்னி வாங்கிக் கொண்டு, சிங்கமுத்து அதனை வேறு ஒருவருக்கு ரூ.1.93 கோடிக்கு விற்றுவிட்டு தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், இன்னொரு இடத்தை போலி ஆவணங்களை காட்டி தன்னிடம் ரூ.12 லட்சத்துக்கு விற்றதாகவும் குறிப்பிட்டிருந்தார். 

இந்த வழக்கு நேற்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வடிவேலு நேரில் ஆஜராகி இரண்டரை மணி நேரம் சாட்சியம் அளித்தார். மேலும், சிங்கமுத்து வக்கீலின் குறுக்கு விசாரணைக்கும் பதில் அளித்தார். 

இவற்றையெல்லாம் பதிவு செய்துகொண்ட நீதிமன்றம் வழக்கை வருகிற அக் 7-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.


Post your comment





Related News
ரூ.9 கோடி நஷ்ட ஈடு புகார்: வடிவேல் நடிக்க தடை
ரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது! இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்
விஜய் படத்தால் முக்கிய இடம் பெற்ற பிரபல நடிகர்! தெரியாத தகவல்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
மீண்டும் உங்கள் அழைப்புக்காக காத்திருக்கிறேன்: விஜய் பற்றி உருக்கமாக பேசிய சச்சின் பட நடிகர்
வடிவேலுக்கு தயாரிப்பாளர் சங்கம் வழங்கிய இறுதி கெடு
சுராஜ் இயக்கத்தில் போலீசாக நடிக்கும் விமல்
வடிவேலு, ரோபோ சங்கர், சூரிக்கு அப்பாவாக நடிக்கும் திண்டுக்கல் ஐ.லியோனி
30 வருட சினிமா வாழ்க்கை, சாதனை நாயகனான வடிவேலு - ஸ்பெஷல் தகவல்.!
அடக்கடவுளே வடிவேலுக்கு இப்படியொரு பிரச்சனையா? - வருத்தத்தில் ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions