தன் வாயால் வழக்கில் மாட்டிய வடிவேலு!

Bookmark and Share

தன் வாயால் வழக்கில் மாட்டிய வடிவேலு!

சரத்குமார் தலைமையில் ஒரு அணியும், விஷால் தலைமையில் ஒரு அணியும் நேரடியாகா மோதும் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு வருகிற 18-ந்தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. 

இதற்காக இரு அணியும் தீவிரமான பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். இதில் நடிகர் வடிவேலு விஷால் அணிக்காக பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார். அப்போது அவர் நடிகர் சங்கத்த காணோம் என கூறியது அனைவரது மனதையும் புண்படுத்தியதாக சரத்குமார் அணி தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில் நாமக்கல் மாவட்ட நாடக நடிகர் சங்க தலைவர் ஆட்டோராஜா, வக்கீல் அய்யாவு மூலம் நாமக்கல் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், உண்மைக்கு மாறான செய்திகளை பரப்பி மன உளைச்சல் ஏற்படுத்திய நடிகர் வடிவேலு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

இதை தொடர்ந்து வருகிற நவம்பர் மாதம் 20-ந்தேதி நடிகர் வடிவேலு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு மோகனம்பாள் நோட்டீசு அனுப்புமாறு உத்தரவிட்டார். 


Post your comment





Related News
ரூ.9 கோடி நஷ்ட ஈடு புகார்: வடிவேல் நடிக்க தடை
ரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது! இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்
விஜய் படத்தால் முக்கிய இடம் பெற்ற பிரபல நடிகர்! தெரியாத தகவல்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
மீண்டும் உங்கள் அழைப்புக்காக காத்திருக்கிறேன்: விஜய் பற்றி உருக்கமாக பேசிய சச்சின் பட நடிகர்
வடிவேலுக்கு தயாரிப்பாளர் சங்கம் வழங்கிய இறுதி கெடு
சுராஜ் இயக்கத்தில் போலீசாக நடிக்கும் விமல்
வடிவேலு, ரோபோ சங்கர், சூரிக்கு அப்பாவாக நடிக்கும் திண்டுக்கல் ஐ.லியோனி
30 வருட சினிமா வாழ்க்கை, சாதனை நாயகனான வடிவேலு - ஸ்பெஷல் தகவல்.!
அடக்கடவுளே வடிவேலுக்கு இப்படியொரு பிரச்சனையா? - வருத்தத்தில் ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions