காமெடிக்கு அதிக சம்பளம் கேட்டு ஓட வைக்கும் வடிவேலு!

Bookmark and Share

காமெடிக்கு அதிக சம்பளம் கேட்டு ஓட வைக்கும் வடிவேலு!

ரீ-என்ட்ரியில் தெனாலிராமன், எலி படங்களில் ஹீரோவாக நடித்தார் வடிவேலு. ஆனால் ரெண்டு படங்களுமே தோல்வியடைந்து விட்டன. இதில் எலி படம் தன்னை ஒருபோதும் ஏமாற்றாது என்று பெரிய அளவில் நம்பினார்.

தன்காரணமாகவே மீடியாக்களிடம் கூட எகிறிப்பேசினார் வடிவேலு. மேலும், இந்த படத்தின் பிரஸ்மீட்டின்போது, தொடர்ந்து ஹீரோவாக மட்டும்தான் நடிப்பீர்களா? என்று கேள்வி கேட்கப்பட்டபோது, அப்படியெல்லாம் இல்லை.

ஹீரோ-காமெடியன் என இரண்டுவிதமாகவும் நடிப்பேன். எலிக்கு பிறகு நான் எதிர்பார்க்கிறபடி காமெடி படங்கள் அமைந்தால் நடிப்பேன் என்றார். அதனால் சமீபத்தில் ஒரு நிறுவனம் அவரை அணுகி காமெடியனாக நடிப்பது பற்றி பேச்சுவார்த்தை நடத்தியதாம்.

ஆனால், அப்படி நடிப்பதற்கு வடிவேலு போட்ட கண்டிசன்களை விடவும், அவர் கேட்ட சம்பளம் அந்த படத்தின் ஹீரோவை விட ஜாஸ்தியாக இருந்ததாம். இதனால் இதோ வருகிறேன் என்று படாதிபதி ஓட்டம் பிடித்து விட்டாராம்.

இந்த செய்தி கோலிவுட்டில் பரவியதை அடுத்து வடிவேலுவை காமெடி வேடத்தில் நடிக்க வைக்க யோசித்துக்கொண்டிருந்தவர்கள்கூட அதை மறுபரிசீலனை செய்யத் தொடங்கி விட்டனர்.


Post your comment





Related News
ரூ.9 கோடி நஷ்ட ஈடு புகார்: வடிவேல் நடிக்க தடை
ரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது! இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்
விஜய் படத்தால் முக்கிய இடம் பெற்ற பிரபல நடிகர்! தெரியாத தகவல்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
மீண்டும் உங்கள் அழைப்புக்காக காத்திருக்கிறேன்: விஜய் பற்றி உருக்கமாக பேசிய சச்சின் பட நடிகர்
வடிவேலுக்கு தயாரிப்பாளர் சங்கம் வழங்கிய இறுதி கெடு
சுராஜ் இயக்கத்தில் போலீசாக நடிக்கும் விமல்
வடிவேலு, ரோபோ சங்கர், சூரிக்கு அப்பாவாக நடிக்கும் திண்டுக்கல் ஐ.லியோனி
30 வருட சினிமா வாழ்க்கை, சாதனை நாயகனான வடிவேலு - ஸ்பெஷல் தகவல்.!
அடக்கடவுளே வடிவேலுக்கு இப்படியொரு பிரச்சனையா? - வருத்தத்தில் ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions