சமூக ஆர்வலர்களை சீண்டிப்பார்க்கும் வடிவேலு!

Bookmark and Share

சமூக ஆர்வலர்களை சீண்டிப்பார்க்கும் வடிவேலு!

தெனாலிராமனைத் தொடர்ந்து யுவராஜ் தயாளன் இயக்கத்தில் மீண்டும் வடிவேலு நடித்துள்ள படம் எலி. இந்த படத்தை மெகா ஹிட் படமாக கொடுத்து விட வேண்டும் என்று மெனக்கெட்டு வருகிறார் வடிவேலு.

அதன்காரணமாக, இப்படத்தில் நடிக்கத் தொடங்கியதில் இருந்தே, ஒவ்வொரு காட்சியில் நடிக்கும்போது டயலாக் விசயத்தில் முன்பை விட அதிக கவனமாக இருந்து வந்துள்ளார்.

முக்கியமாக, இளவட்ட ரசிகர்களை கவர வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு யூத்துக்கு பிடித்தமான டயலாக்குகளை அதிகமாக பேசி நடித்துள்ளாராம். மேலும், படம் வெறும் சாப்ட்டாகவே சென்றால் சரிவராது.

ஏதேனும் ஒரு வகையில் பரபரப்பு கூட்ட வேண்டும் என்பதற்காகவே, ஆராதனா இந்தி படத்தின் பாடலில் சதாவுடன் இணைந்து நடனமாடியிருக்கிறாராம். அது மட்டுமின்றி, திருடன் கெட்டப்பில் நடித்துள்ள வடிவேலு, ஒரு காட்சியில் கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருப்பது போன்றும் நடித்துள்ளாராம்.

காரணம், மக்கள் தொகை மிகுந்த இடத்தில் திருடுவதை தொழிலாகக்கொண்ட வடிவேலு, அந்த ஏரியாக்களில் எந்நேரமும் விமானம் மேலே பறந்து கொண்டேயிருப்பதால், மக்கள் தூங்காமல் விழித்தபடியே இருப்பார்களாம்.

இதனால் அவர் திருட்டு தொழில் செய்ய முடியாமல் தவிப்பாராம். அதனால் விமானம் இரவு நேரங்களில் பறப்பதை தடுக்க வேண்டும் என்பதற்காக, இப்படி இரவு நேரங்களில் விமானம் பறப்பது மக்களின் தூக்கத்திற்கு இடையூறாக இருக்கிறது என்று அவர்களுக்கு நல்லது செய்வது போன்று அந்த உண்ணாவிரத போராட்டத்தை நடத்துவாராம்.

அந்த காட்சியின்போது அவரை போலீசார் சூழ்ந்து கொண்டு அமைதியாக கலைந்து செல்லுமாறு கூறுவார்களாம். அப்போது ஏற்படும் வாக்குவாதத்தில், நீங்களெல்லாம் யார் என்று போலீசார் கேட்பார்களாம்.

அதற்கு, நாங்கள் இந்த சமூகத்தின் மீது அக்கறை கொண்ட சமூக ஆர்வலர்கள் என்பாராம் வடிவேலு. அதோடு டிராபிக் ராமசாமி போன்ற சில சமூக ஆர்வலர்களின் பெயரையும் குறிப்பிடுகிறாராம்.

ஆனால், இந்த காட்சி சமூக ஆர்வலர்களை கிண்டல் செய்வது போல்தான் உள்ளதாம். அதனால் எலி வெளியாகும்போது சமூக ஆர்வலர்கள் கொதிப்பார்கள் என்று கூறப்படுகிறது.


Post your comment





Related News
ரூ.9 கோடி நஷ்ட ஈடு புகார்: வடிவேல் நடிக்க தடை
ரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது! இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்
விஜய் படத்தால் முக்கிய இடம் பெற்ற பிரபல நடிகர்! தெரியாத தகவல்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
மீண்டும் உங்கள் அழைப்புக்காக காத்திருக்கிறேன்: விஜய் பற்றி உருக்கமாக பேசிய சச்சின் பட நடிகர்
வடிவேலுக்கு தயாரிப்பாளர் சங்கம் வழங்கிய இறுதி கெடு
சுராஜ் இயக்கத்தில் போலீசாக நடிக்கும் விமல்
வடிவேலு, ரோபோ சங்கர், சூரிக்கு அப்பாவாக நடிக்கும் திண்டுக்கல் ஐ.லியோனி
30 வருட சினிமா வாழ்க்கை, சாதனை நாயகனான வடிவேலு - ஸ்பெஷல் தகவல்.!
அடக்கடவுளே வடிவேலுக்கு இப்படியொரு பிரச்சனையா? - வருத்தத்தில் ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions