டயலாக்கை குறைத்து பர்பார்மென்ஸை அதிகப்படுத்திய வடிவேலு!

Bookmark and Share

டயலாக்கை குறைத்து பர்பார்மென்ஸை அதிகப்படுத்திய வடிவேலு!

தெனாலிராமனை இயக்கிய யுவராஜ் இயக்கத்தில் வடிவேலு மீண்டும் நடித்து வரும் படம் எலி.  இந்த படத்தில் ஒரு எலியின் குணாதிசயம் கொண்டவராக நடிக்கிறார் வடிவேலு.

அதனால் அவர் செய்யும் காமெடி சேட்டைகளும் புதுசாக இருக்குமாம். குறிப்பாக, தனது மேனரிஸத்தை மாற்றி நடை உடை, டயலாக் டெலிவரி என அனைத்தையும் மாற்றிக்கொண்டு நடிக்கிறார் வடிவேலு.

அதோடு, ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஜெயில் காட்சியும் இந்த படத்தில் உள்ளதாம். அதாவது வடிவேலுவை ஒருவன் ஒரு பிரச்சினையில் சிக்க வைத்து விட, அவரை போலீஸ் கைது செய்து ஜெயிலில் அடைத்து விடுவார்களாம்.

ஆனால், இரவில் காவல் நிலைய அதிகாரிகள் அனைவருமே தூங்கிக்கொண்டிருக்க, வடிவேலுவோ, எலி மாதிரி சுவரை துளைத்துக்கொண்டு எஸ்கேப் ஆகி விடுவாராம். அதையடுத்து, மாயமாக மறைந்த வடிவேலுவை, ஒரு போலீஸ் டீம் சல்லடை போட்டு தேடுவார்களாம்.

ஆனாலும், அனைவர் கண்ணிலும் மண்ணைத்தூவி விட்டு மறைந்து வாழ்ந்து கொண்டிருப்பாராம். இந்த காமெடி ட்ராக் வடிவேலுவுக்கு ரொம்ப பிடித்தமானதாம். அதனால், இதில் தன்னுடன் கிங்காங்கையும் சேர்த்துக்கொண்டு இதுவரை அவருடன் நடித்த காமெடி காட்சிகளை விட ஹைலைட்டாக அமைய வேண்டும் என்று டயலாக்கை குறைத்து காட்சி வடிவில் வித்தியாசமான காமெடியை செய்திருக்கிறாராம் வடிவேலு.


Post your comment





Related News
ரூ.9 கோடி நஷ்ட ஈடு புகார்: வடிவேல் நடிக்க தடை
ரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது! இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்
விஜய் படத்தால் முக்கிய இடம் பெற்ற பிரபல நடிகர்! தெரியாத தகவல்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
மீண்டும் உங்கள் அழைப்புக்காக காத்திருக்கிறேன்: விஜய் பற்றி உருக்கமாக பேசிய சச்சின் பட நடிகர்
வடிவேலுக்கு தயாரிப்பாளர் சங்கம் வழங்கிய இறுதி கெடு
சுராஜ் இயக்கத்தில் போலீசாக நடிக்கும் விமல்
வடிவேலு, ரோபோ சங்கர், சூரிக்கு அப்பாவாக நடிக்கும் திண்டுக்கல் ஐ.லியோனி
30 வருட சினிமா வாழ்க்கை, சாதனை நாயகனான வடிவேலு - ஸ்பெஷல் தகவல்.!
அடக்கடவுளே வடிவேலுக்கு இப்படியொரு பிரச்சனையா? - வருத்தத்தில் ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions