வடிவேலுவுக்கான இடம் இன்னும் காலியாகத்தான் உள்ளதாம்!

Bookmark and Share

வடிவேலுவுக்கான இடம் இன்னும் காலியாகத்தான் உள்ளதாம்!

தெனாலிராமன் படத்தையடுத்து வடிவேலு நாயகனாக நடித்து வெளியாகியுள்ள படம் எலி. இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு பல கதைகளை ஆலோசித்து வந்தாராம் வடிவேலு.

அப்போது 1972ல் முத்துராமன், லட்சுமி, தேங்காய் சீனிவாசன் நடிப்பில் வெளியான காசேதான் கடவுளடா படத்தில் தேங்காய் சீனிவாசன் நடித்தது போன்ற சாமியார் வேடத்தில் நடிக்குமாறு அவரது அபிமானிகள் கேட்டுக்கொண்டார்களாம்.

ஆனால், அந்த கதை வடிவேலுக்கு மிகவும் பிடித்து போனதாம். இருப்பினும் மீண்டும் காமெடி பீசாக நடிக்க விரும்பாத வடிவேலு, காமெடியனாக ஏராளமான படங்களில் நடித்துவிட்டேன். அதனால் இனிமேல் ஹீரோ இமேஜை உருவாக்குவதே எனது நோக்கம் என்று சொல்லிதான், எலி படத்தின் கதையை ஓகே செய்தாராம்.

அதோடு, நான் காமெடியன் என்றாலும், எம்ஜிஆர் ரேஞ்சுக்கு கருத்து சொல்லப்போகிறேன் என்றுதான் நாடோடி மன்னன் படத்தில் தூங்காதே தம்பி தூங்காதே என்று எம்ஜிஆர் பாடியது போன்று இவரும் எலி படத்தில் ஒரு ஜெயில் தத்துவப்பாடலை பாடினாராம்.

ஆனால், இப்போது தனது தத்துவத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இல்லாததால், நம்மளை ஹீரோவா ஏத்துக்க மாட்டேங்க போலிருக்கே என்று பீல் பண்ணக்கொண்டிருக்கிறாராம் வடிவேலு.

மேலும், தனக்கு பிடித்தான காசேதான் கடவுளப்பா படத்தின் கதையில் நடித்திருந்தால் அபிமானிகள் சொன்னது போன்று ஹிட் கிடைத்திருக்குமே. அவசரப்பட்டு எலியில் நடித்து விட்டோமே என்றும் புலம்பிக்கொண்டிருக்கிறாராம் வைகைப்புயல்.

அதேசமயம், தமிழ் சினிமாவில் எனக்கான காமெடி இடம் இன்னும் காலியாகதான் உள்ளது. அதை யாரும் கைப்பற்றவில்லை என்பதை மட்டும் அடிக்கடி சொல்லிக்கொண்டேயிருக்கிறாராம் வடிவேலு. ஆனால் அவருக்குப்பிறகு கோலிவுட்டில் நம்பர்ஒன் காமெடியனாகி விட்ட சந்தானம், சூரியை அவர் கணக்கில் கொள்வதே இல்லையாம்.


Post your comment





Related News
ரூ.9 கோடி நஷ்ட ஈடு புகார்: வடிவேல் நடிக்க தடை
ரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது! இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்
விஜய் படத்தால் முக்கிய இடம் பெற்ற பிரபல நடிகர்! தெரியாத தகவல்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
மீண்டும் உங்கள் அழைப்புக்காக காத்திருக்கிறேன்: விஜய் பற்றி உருக்கமாக பேசிய சச்சின் பட நடிகர்
வடிவேலுக்கு தயாரிப்பாளர் சங்கம் வழங்கிய இறுதி கெடு
சுராஜ் இயக்கத்தில் போலீசாக நடிக்கும் விமல்
வடிவேலு, ரோபோ சங்கர், சூரிக்கு அப்பாவாக நடிக்கும் திண்டுக்கல் ஐ.லியோனி
30 வருட சினிமா வாழ்க்கை, சாதனை நாயகனான வடிவேலு - ஸ்பெஷல் தகவல்.!
அடக்கடவுளே வடிவேலுக்கு இப்படியொரு பிரச்சனையா? - வருத்தத்தில் ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions