
தெனாலிராமனைத் தொடர்ந்து வடிவேலு நாயகனாக நடித்து வரும் படம் எலி. இந்த படத்தை யுவராஜ் தயாளன் இயக்கி வருகிறார். 1970களில் நடக்கும் கதையில் இப்படம் தயாராகிறது.
அந்நியன் நாயகி சதா இப்படத்தில் ஒரு பாட்டுக்கு வடிவேலுவுடன் இணைந்து குத்தாட்டம் ஆடுகிறார். இப்படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடிக்க தென்னிந்திய நடிகைகள் யாரும் ஒத்துக்கொள்ளாததால் இப்போது தெனாலிராமனில் நடித்த மீனாட்சி தீட்ஷித்தை போன்று ஒரு மும்பை நடிகையை நடிக்க வைக்க பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில், வடிவேலு சம்பந்தப்பட்ட பெருவாரியான காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் நிலையில், சமீபத்தில் ஒரு தத்துவப்பாட்டு படமாக்கப்பட்டுள்ளது. இந்த பாடலில் இன்றைய நாட்டு நடப்புகளை சொல்லி, வாழ்க்கையின் யதார்த்தங்களையும் போதிக்கும் வகையில் பாடுகிறாராம் வடிவேலு.
முக்கியமாக எம்ஜிஆர் படங்களில் இடம்பெற்ற தத்துவப்பாடல்களை போன்று உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடலை வித்யாசாகரின் இசையில் வடிவேலுவே பின்னணி பாடியிருக்கிறார்.
சற்று ஆட்டம் போட வைக்கும் குத்துப்பாட்டு பாணியில் இப்பாடல் இருந்தாலும் இன்றைய இளவட்டங்கள் ரசிக்கும் வகையில் கருத்துக்கள் உள்ளதாம். இதேபோல் இப்படத்தின் ஒவ்வொரு பாடல்களிலும் ஒரு முக்கிய கருத்தினை மையமாக வைத்து எழுத வைத்திருக்கிறாராம் வடிவேலு.
Post your comment