காமெடி புயல் வடிவேலு மீது மோசடி புகார்!

Bookmark and Share

காமெடி புயல் வடிவேலு மீது மோசடி புகார்!

தமிழ் சினிமாவில் நம்பர்1 காமெடியனாக வலம்வந்தவர் நடிகர் வடிவேலு. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை தன நடிப்பால் கவர்ந்திருந்தார். பிறகு இவரின் அரசியல் ஈடுபாட்டால் பல சிக்கலில் மாட்டி சிறிது காலம் தலைமறைவாக இருந்தார்.

இன்றுவரை அவருடைய இடத்தை எந்த காமெடியனாலும் பிடிக்கமுடியவில்லை. தற்போது மீண்டும் நடிக்க வந்த வடிவேலு, ஹீரோவாக தான் நடிப்பேன் என்று அடம் பிடித்து தெனாலிராமன், எலி ஆகிய படங்களில் நடித்தார். காமெடி பின்னணி என்றாலும் இப்படங்கள் தோல்வியை தலுவியது.

இந்த நிலையில் இந்தப் படத்தில் நடித்த வடிவேலு தன்னை மோசடி செய்துவிட்டதாக அதன் தயாரிப்பாளர் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில், ரூ 12 கோடிக்கு இந்தப் படம் எடுக்கப்பட்டதாகவும், அதில் வடிவேலுவுக்கு சம்பளமாக மட்டும் ரூ 8 கோடி கொடுத்ததாகவும், படம் வெளியாவதற்கு முன்பே ஒரு சேனலில் ரூ 10 கோடி வரை தரத் தயாராக இருந்தும் அதனை வாங்க விடாமல் வடிவேலு தடுத்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

அதுமட்டுமின்றி, வேறு சேனல்கள் எதுவும் இந்தப் படத்தை வாங்காமல் விட்டதால், தனக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. இவை அனைத்துக்குமே வடிவேலுதான் காரணம் என்றும் எலி படத்தின் தயாரிப்பாளர் சதீஷ்குமார், வடிவேலு தன்னை மோசடி செய்து விட்டதாக காவல் ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளார். இச்சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.


Post your comment





Related News
ரூ.9 கோடி நஷ்ட ஈடு புகார்: வடிவேல் நடிக்க தடை
ரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது! இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்
விஜய் படத்தால் முக்கிய இடம் பெற்ற பிரபல நடிகர்! தெரியாத தகவல்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
மீண்டும் உங்கள் அழைப்புக்காக காத்திருக்கிறேன்: விஜய் பற்றி உருக்கமாக பேசிய சச்சின் பட நடிகர்
வடிவேலுக்கு தயாரிப்பாளர் சங்கம் வழங்கிய இறுதி கெடு
சுராஜ் இயக்கத்தில் போலீசாக நடிக்கும் விமல்
வடிவேலு, ரோபோ சங்கர், சூரிக்கு அப்பாவாக நடிக்கும் திண்டுக்கல் ஐ.லியோனி
30 வருட சினிமா வாழ்க்கை, சாதனை நாயகனான வடிவேலு - ஸ்பெஷல் தகவல்.!
அடக்கடவுளே வடிவேலுக்கு இப்படியொரு பிரச்சனையா? - வருத்தத்தில் ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions