வடிவேலுவை வைத்து மீண்டும் படம் தயாரிக்கும் ஏஜிஎஸ் பிலிம்ஸ்?

Bookmark and Share

வடிவேலுவை வைத்து மீண்டும் படம் தயாரிக்கும் ஏஜிஎஸ் பிலிம்ஸ்?

திருட்டுப்பயலே, சந்தோஷ் சுப்ரமணியம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், யுத்தம் செய், மாற்றான், தெனாலிராமன், அனேகன் என பல படங்களை தயாரித்து வெளியிட்ட ஏஜிஎஸ் பிலிம்ஸ் தற்போது வை ராஜா வை படத்தையும் தயாரித்து வெளியிடுகிறது.

தொடர்ந்து ஜெயம்ரவி நடிக்கும் தனி ஒருவன் படத்தை தயாரித்து வருகிறது. இந்தநிலையில், வடிவேலு செகண்ட் இன்னிங்சில் நடிக்க தயாரானபோது யாருமே அவரை வைத்து படம் தயாரிக்க முன்வராதபோது ஏஜிஎஸ் நிறுவனம்தான் தைரியமாக அவரை வைத்து தெனாலிராமன் படத்தை தயாரித்தது.

ஆனால் அந்த படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. இருப்பினும், தற்போது எலி படத்தில் நடித்துள்ள வடிவேலுவை வைத்து அடுத்து ஏஜிஎஸ் நிறுவனமே ஒரு படத்தை தயாரிப்பதாகவும், அந்த படத்தை பிரபல இயக்குனர் ஒருவர் இயக்குவதாகவும் தற்போது செய்திகள் கசிந்துள்ளன. எலி திரைக்கு வந்ததும் இந்த படம் குறித்த செய்திகள் வெளியாகும் என்கிறார்கள். 

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions