அஜித் கூறிய வார்த்தை, கண் கலங்கிய வடிவேலு

Bookmark and Share

அஜித் கூறிய வார்த்தை, கண் கலங்கிய வடிவேலு

அஜித் எப்போதும் எல்லோருக்கும் மரியாதை கொடுக்க தெரிந்தவர். அதே நேரத்தில் தனக்கு ஒருவரிடம் மோதல் இருந்தால், எந்த காரணத்தை முன்னிட்டும் அவர் பக்கம் செல்லவே மாட்டார்.

அப்படித்தான் ராஜா படத்தின் படப்பிடிப்பில் அஜித்திற்கும், வடிவேலுவிற்கு கொஞ்சம் மனக்கசப்பு ஏற்பட்டது, அதன் பிறகு அஜித் எந்த ஒரு படத்திலும் வடிவேலுவை கமிட் செய்யவில்லை.

ஆனால், சமீபத்தில் நடந்த ஜல்லிக்கட்டிற்கு ஆதரவான நடிகர் சங்க உண்ணாவிரதத்தில் வடிவேலுவை அஜித் சந்திக்கும் நிலை ஏற்பட்டது.

அந்த நேரத்தில் வடிவேலு நேராக வந்து அஜித்தின் கையை பிடித்து நலம் விசாரிக்க, அஜித்தும் அத்தனையும் மறந்து ‘எப்படி இருக்கீங்க வடிவேலு’ என்று பதில் நலம் விசாரித்தார்.

நீண்ட நாட்களாக பேசாமல் இருந்தவர்கள் தற்போது பேச, வடிவேலு ஒருக்கட்டத்தில் கொஞ்சம் எமோஷ்னலாகவே காணப்பட்டார்.

அதற்கு முக்கிய காரணம் ‘கவலைப்படாதீங்க வடிவேலு, சீக்கிரம் நம்ம ஒரு படம் பண்றோம்’ என அஜித் கூறிய வார்த்தை தான் என ஒரு தகவல் கசிந்துள்ளது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions