பத்திரிகையாளர் சந்திப்பை கேன்சல் செய்த வடிவேலு

Bookmark and Share

பத்திரிகையாளர் சந்திப்பை கேன்சல் செய்த வடிவேலு

வடிவேலு தற்போது நாயகனாக நடித்து வரும் 'எலி' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று மாலை 6 மணிக்கு சென்னையில் நடைபெறுவதாக இருந்தது.

ஆனால், ஜெயலலிதா விடுதலை என தீர்ப்பு வெளியான அடுத்த சில நிமிடங்களுக்குள் இன்று நடைபெறுவதாக இருந்த பத்திரிகையாளர் சந்திப்பை கேன்சல் செய்வதாக அறிவித்துவிட்டனர்.

ஏற்கெனவே இன்று திரையுலகத்தில் 'மாஸ்' படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு, பத்திரிகை தொடர்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் உட்பட சில நிகழ்ச்சிகள் நடைபெறுவதாக இருந்தது.

ஆனால், இவற்றை சில நாட்களுக்கு முன்பே கேன்சல் செய்து விட்டனர். ஆனால், வடிவேலு தரப்பிலிருந்து நேற்று பத்திரிகையாளர்களை இன்று சந்திப்பதாக தகவல்களை அனுப்பியிருந்தனர்.

அப்போதே என்ன இது, வடிவேலு ஜெயலலிதா பற்றிய தீர்ப்பு வரும் நாளன்று பத்திரிகையாளர்களை சந்திக்கிறாரே என்று பேச்சு எழுந்தது. இப்போது வடிவேலு கேன்சல் செய்திருப்பதும் ஒருவித பேச்சைக் கிளப்பியுள்ளது.

இதனிடையே, 'எலி' படத்தை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் வெளியிட, படத்தின் தொலைக்காட்சி உரிமையை ஜெயா டிவி கேட்கும் விலைக்குத் தர படத்தின் தயாரிப்பாளர் தயாராக உள்ளாராம். அது சம்பந்தமான பேச்சு வார்த்தை கூட முடிந்து விட்டதாம். மேலிட அனுமதிக்காகக் காத்திருக்கிறார்கள்.


Post your comment





Related News
வடிவேலுவுக்கு செல்பி எடுக்க கற்றுக்கொடுத்த யுவராஜ்
மே 22-ல் வடிவேலுவின் எலி தியேட்டருக்கு வருகிறது!
கலெக்டர் அலுவலகம் முன்பு வடிவேலு பட்டினிப் போராட்டம்!
சதாவின் காலில் மிதித்து அழ வைத்த வடிவேலு!
கதைகளில் தலையீடுகிறாரா வடிவேலு?: கொதித்தெழுந்த இயக்குனர்
வடிவேலுவின் அச்சம்!
எலி காமெடியை பார்த்து பிரஷர், சுகரை குறையுங்கள்: வடிவேலு வேண்டுகோள்
குழந்தைகளுக்கான கோடை விருந்தாக வருகிறது வடிவேலுவின் எலி!
வடிவேலுவின் எலி, சீனா தானா 007 படத்தின் தழுவலா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions