வடிவேலுவின் அச்சம்!

Bookmark and Share

வடிவேலுவின் அச்சம்!

அரசியல் பிரவேசத்துக்குப் பிறகு வடிவேலுவின் சினிமா கேரியரே பாதிக்கப்பட்டது. இரண்டு வருடங்களாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தார். அவரை வைத்து படம் தயாரித்தால் அந்த படத்தை ரிலீஸ் செய்கிற நேரத்தில் அரசியல் தலையீடுகள் ஏற்படும் என்று யாரும் அவரை வைத்து படம் பண்ண முன்வரவில்லை.

இருப்பினும். அந்த சூழ்நிலையிலும் வடிவேலுவை வைத்து தெனாலிராமன் என்ற படத்தை தயாரித்தார் கல்பாத்தி அகோரம். ஆனால் அந்த படம் ஓடவில்லை. அதனால் இனிமேல் வடிவேலு காலிதான் என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்க மறுபடியும் தற்போது எலி படத்தில் நடித்து வருகிறார்.  

இந்த நிலையில், வடிவேலு தனது படத்தில் அரசியல் சம்பந்தப்பட்ட கருத்துக்கள், காமெடிகளை வைக்க ரொம்பவே யோசிக்கிறாராம். சாதாரணமான தான் சொல்லும் விசயங்களைகூட பெருசுபடுத்தி விடுவார்கள் என்பதால், யாரையாவது தாக்குவதுபோல் காமெடி காட்சிகள் இருந்தாலும் அதை தவிர்த்து வருகிறார் வடிவேலு.

அது மட்டுமின்றி, படப்பிடிப்பு தளங்களில் தனக்கு யாராவது சரியான பழக்கமில்லாத நபர்கள் ஏதேனும் புதிதாக சாப்பிடும் அயிட்டங்களை கொடுத்தால் அதை அவர் ஏற்றுக்கொள்வதில்லையாம்.

நான் இப்போது அல்ல எப்போதுமே வெளிநபர்கள் கொடுக்கும் உணவுகளை சாப்பிடுவதே இல்லை என்றொரு பாலிஸியை கடைபிடித்து வருகிறேன் என்கிறாராம். ஆனால் அவருடன் இணைந்து நடிப்பவர்களோ, அவருக்கு உணவுகளில் யாரேனும் எதையாவது கலந்து தந்துவிடக்கூடாது என்கிற பயம் எப்போதுமே உண்டு.

அதனால்தான் புதிய நபர்கள் தரும் உணவுகளை சாப்பிட மறுக்கும் வடிவேலு, அதை தனது கொள்கையாகவே மாற்றி விட்டார் என்கிறார்கள்.


Post your comment





Related News
வடிவேலுவுக்கு செல்பி எடுக்க கற்றுக்கொடுத்த யுவராஜ்
பத்திரிகையாளர் சந்திப்பை கேன்சல் செய்த வடிவேலு
மே 22-ல் வடிவேலுவின் எலி தியேட்டருக்கு வருகிறது!
கலெக்டர் அலுவலகம் முன்பு வடிவேலு பட்டினிப் போராட்டம்!
சதாவின் காலில் மிதித்து அழ வைத்த வடிவேலு!
கதைகளில் தலையீடுகிறாரா வடிவேலு?: கொதித்தெழுந்த இயக்குனர்
எலி காமெடியை பார்த்து பிரஷர், சுகரை குறையுங்கள்: வடிவேலு வேண்டுகோள்
குழந்தைகளுக்கான கோடை விருந்தாக வருகிறது வடிவேலுவின் எலி!
வடிவேலுவின் எலி, சீனா தானா 007 படத்தின் தழுவலா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions