கதைகளில் தலையீடுகிறாரா வடிவேலு?: கொதித்தெழுந்த இயக்குனர்

Bookmark and Share

கதைகளில் தலையீடுகிறாரா வடிவேலு?: கொதித்தெழுந்த இயக்குனர்

வடிவேலு கதாநாயகனாக நடிக்கும் படங்களில் அவரின் தலையீடு பெரும்பாலும் இருக்கும் என்று சினிமா வட்டாரங்களில் பரவலான ஒரு செய்தி பரவி வருகிறது.

இதுகுறித்து, வடிவேலுவை வைத்து தற்போது ‘எலி’ என்ற படத்தை இயக்கி வரும் யுவராஜ் தயாளன் கூறும்போது,

வடிவேலு மாதிரியான ஒரு சௌகரியமான நடிகர் எனக்கு கிடைக்க மாட்டார். ஒரு தோல்வி ஏற்பட்டால், அந்த பழியை யார் மீதாவது சுமத்துவது வாடிக்கையான ஒன்றுதான். அதுபோல்தான் வடிவேல் விஷயத்திலும் நடந்துள்ளது.

ஆனால், வடிவேலு ஒரு அற்புதமான மனிதர். ஒவ்வொரு காட்சியையும் என்னிடம் ஒவ்வொரு விதமாக நடித்து காட்டி, எது நன்றாக இருக்கிறது? என்று கேட்பார். இவ்வளவு அனுபவம் வாய்ந்த ஒரு நடிகர், வளர்ந்து வரும் ஒரு இயக்குனரிடம் இவ்வளவு எளிமையாக நடந்து கொள்வது எனக்கே வியப்பாக இருக்கும்.

அதிகாலை 2 மணி 3 மணிக்கு எனக்கு போன் செய்து, அந்த காட்சியை இப்படி எடுக்கலாம், அப்படி எடுக்கலாம் என்று யோசனை தருவார். எந்நேரமும் இந்த படத்தை மெருகேற்றுவது பற்றியே அவருடைய சிந்தனை இருக்கும்.

நாம் ஒரு வசனத்தை கொடுத்து அவரை பேசச் சொன்னால், அவர் அதை தனது பாடி லாங்குவேஷுக்கு ஏற்ற மாதிரி மாற்றி பேசி நடிப்பார். அது படத்திற்கு மேலும் வளர்ச்சியைத்தான் தருமே தவிர, ஒருபோதும் அவர் இயக்கத்தில் தலையிடுவதாக கூறமுடியாது.

இதுபோல், வடிவேலுவை பற்றி பேசியவர்களை எல்லாம் கண்டிக்கிறேன். அவருடைய 25 வருட அனுபவ சினிமாவை என்னுடன் பகிர்ந்திருக்கிறார். இதைக் கற்றுக்கொண்ட நான் இனிமேல் எப்படி வருவேன் என்று பாருங்கள் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார். 


Post your comment





Related News
வடிவேலுவுக்கு செல்பி எடுக்க கற்றுக்கொடுத்த யுவராஜ்
பத்திரிகையாளர் சந்திப்பை கேன்சல் செய்த வடிவேலு
மே 22-ல் வடிவேலுவின் எலி தியேட்டருக்கு வருகிறது!
கலெக்டர் அலுவலகம் முன்பு வடிவேலு பட்டினிப் போராட்டம்!
சதாவின் காலில் மிதித்து அழ வைத்த வடிவேலு!
வடிவேலுவின் அச்சம்!
எலி காமெடியை பார்த்து பிரஷர், சுகரை குறையுங்கள்: வடிவேலு வேண்டுகோள்
குழந்தைகளுக்கான கோடை விருந்தாக வருகிறது வடிவேலுவின் எலி!
வடிவேலுவின் எலி, சீனா தானா 007 படத்தின் தழுவலா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions