சதாவின் காலில் மிதித்து அழ வைத்த வடிவேலு!

Bookmark and Share

சதாவின் காலில் மிதித்து அழ வைத்த வடிவேலு!

வடிவேலு நடித்து வரும் எலி படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையிலுள்ள பின்னி மில்லில் நடந்து வருகிறது. அங்குள்ள ஜெயில் செட்டப்பில் சில முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

அங்கே அந்த காலத்து திருடன் போன்று வடிவேலுவும், அவருடன் நடிக்கும் போலீஸ்காரர்களும் கூட்டம் கூட்டமாக அலைந்து கொண்டிருக்கின்றனர். மேலும், முன்னதாக சதாவுடன் வடிவேலு ஆடிப்பாடிய ஒரு குத்துப்பாட்டு படமாக்கப்பட்டு விட்டது.

ஆனால் அந்த பாடலில் வடிவேலுவுடன் ஆட வேண்டும் என்றதும் ஆரம்பத்தில் சற்று சோர்வாக காணப்பட்ட சதா, பின்னர் அவர் அவ்வப்போது காட்டிய கிச்சு கிச்சு காமெடிகளால் உற்சாகமாக அவருடன் கட்டித்தழுவி நடனமாடினார்.

ஆனால், அப்படி அவர் மெய்மறந்து உற்சாக ஆட்டம் போட்டபோது ஒருமுறை, சதாவின் காலில் நறுக்கென்று மிதித்து விட்டாராம் வடிவேலு. இதனால் ஆவென்று வலி தாங்க முடியாமல் அலறி விட்டாராம் சதா.

இதையடுத்து, காலை பிடித்துக்கொண்டு அவர் உட்கார்ந்துவிட சில நடன கலைஞர்கள் ஓடிவந்து அவரை காலை பிடித்து தடவிக்கொடுத்து சரி பண்ணி விட்டார்களாம். விளைவு, அதுவரை செம குத்தாட்டம் போட்ட சதாவின் ஆட்டத்தில் பின்னர் வேகம் குறைந்து காணப்பட்டதாம்.

அதனால் அன்றைய தினம் பாதியோடு படப்பிடிப்பை நிறுத்தி விட்டு மறுநாள் மீண்டும் அதே பழைய உற்சாகத்துடன் சதாவை ஆட வைத்து அவருடன் ரொமான்டிக் மனநிலையுடன் ஆடினாராம் வடிவேலு. 

 


Post your comment





Related News
வடிவேலுவுக்கு செல்பி எடுக்க கற்றுக்கொடுத்த யுவராஜ்
பத்திரிகையாளர் சந்திப்பை கேன்சல் செய்த வடிவேலு
மே 22-ல் வடிவேலுவின் எலி தியேட்டருக்கு வருகிறது!
கலெக்டர் அலுவலகம் முன்பு வடிவேலு பட்டினிப் போராட்டம்!
கதைகளில் தலையீடுகிறாரா வடிவேலு?: கொதித்தெழுந்த இயக்குனர்
வடிவேலுவின் அச்சம்!
எலி காமெடியை பார்த்து பிரஷர், சுகரை குறையுங்கள்: வடிவேலு வேண்டுகோள்
குழந்தைகளுக்கான கோடை விருந்தாக வருகிறது வடிவேலுவின் எலி!
வடிவேலுவின் எலி, சீனா தானா 007 படத்தின் தழுவலா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions