வடிவேலுவின் எலி, சீனா தானா 007 படத்தின் தழுவலா?

Bookmark and Share

வடிவேலுவின் எலி, சீனா தானா 007 படத்தின் தழுவலா?

தெனாலிராமன் படத்திற்கு பிறகு வடிவேலு நடிக்கும் புதிய படம் எலி. தெனாலிராமன் படத்தை இயக்கிய யுவராஜ் தயாளன் இயக்குகிறார். அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர், ஜெய்சங்கர், ரவிசந்திரன் போன்ற ஆக்ஷன் ஹீரோக்கள் கொள்ளைகூட்ட பாஸை கண்டுபிடிக்க அவர்களின் இடத்துக்கே மாறுவேஷத்தில் செல்வார்கள்.

அங்கு வேலை செய்து கொண்டே துப்பறிவார்கள். அது சீரியசாக இருக்கும். அதுவே சிரிப்பாக இருந்தால் அதுதான் எலியின் கதை என்கிறார்கள். ஒரு கும்பலை பிடிக்க எலி மாதிரி உள்ளே புகுந்து செல்லும் வடிவேலு ஒரு ரகசிய உளவாளி. அங்கு அவர் புத்திசாலித்தனமாக செயல்படுவதாக நினைத்துக் கொண்டு செய்யும் காரியங்கள்.

மொக்கையாகி அவரையே திருப்பி அடிக்கும். அது மக்களை சிரிக்க வைக்கும்.இப்படி ஒரு கதைதான் 2007ம் ஆண்டு வெளிவந்த சீனாதானா 007 என்ற படத்தின் கதையும். இது மலையாளத்தில் வெளிவந்த சி.ஐ.டி மூசா என்கிற படத்தின் ரீமேக். டி.பி.கஜேந்திரன் இயக்கி இருந்தார்.

வடிவேலுவும், பிரசன்னாவும் தனியார் துப்பறியும் நிறுவனம் நடத்துவார்கள், வடிவேலு பெயர் சீனிச்சாமி, பிரசன்னா பெயர் தமிழரசு இரண்டையும் சேர்த்துதான் சீனாதான என்று பெயர்.

அதிலும் வடிவேலு துப்புதுலக்குகிறேன் என்ற பெயரில் மொக்கையாக எதையாவது செய்து சிரிக்க வைப்பார். அதேபோன்ற கதைதான் இது என்றும், எலி படத்தில் வடிவேலு நடிக்கும் கேரக்டர் ஒன்றும் புதிதானது இல்லை என்றும் சொல்கிறார்கள். சீனாதானாவில் வடிவேலுக்கு ஜோடிஇல்லை. இதில் ஜோடி உண்டு. டூயட், ரொமான்ஸ் எல்லாமே உண்டு.


Post your comment





Related News
வடிவேலுவுக்கு செல்பி எடுக்க கற்றுக்கொடுத்த யுவராஜ்
பத்திரிகையாளர் சந்திப்பை கேன்சல் செய்த வடிவேலு
மே 22-ல் வடிவேலுவின் எலி தியேட்டருக்கு வருகிறது!
கலெக்டர் அலுவலகம் முன்பு வடிவேலு பட்டினிப் போராட்டம்!
சதாவின் காலில் மிதித்து அழ வைத்த வடிவேலு!
கதைகளில் தலையீடுகிறாரா வடிவேலு?: கொதித்தெழுந்த இயக்குனர்
வடிவேலுவின் அச்சம்!
எலி காமெடியை பார்த்து பிரஷர், சுகரை குறையுங்கள்: வடிவேலு வேண்டுகோள்
குழந்தைகளுக்கான கோடை விருந்தாக வருகிறது வடிவேலுவின் எலி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions