குழந்தைகளுக்கான கோடை விருந்தாக வருகிறது வடிவேலுவின் எலி!

Bookmark and Share

குழந்தைகளுக்கான கோடை விருந்தாக வருகிறது வடிவேலுவின் எலி!

முழுக்க முழுக்க நகைச்சுவைப் படமாக உருவாகி வரும் வடிவேலுவின் எலி, குழந்தைகளைக் குதூகலப்படுத்த இந்த கோடையில் வெளியாகிறது. வடிவேலு - யுவராஜ் தயாளன் இரண்டாம் முறையாக கூட்டணி அமைத்திருக்கும் இந்தப் படம், 1960களின் பிண்ணனியில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. 

இப்படத்தை சிட்டி சினி கிரியேஷன்ஸ் சார்பாக ஜி சதிஷ் குமார் தயாரிக்கிறார். கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி சென்னையில் தொடங்கிய படபிடிப்பு இரவு பகலாக இடைவிடாமல் நடைப்பெற்று வருகிறது.

பின்னி மில் வளாகத்தில் ஆடம்பர வீடு, பழமையான வீடுகள், பிரமாண்டமான வீடுகளின் உள்கட்டமைப்புகள், வில்லனின் ரகசிய இருப்பிடம் என 15க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட அரங்குகள் கோடிகணக்கான செலவில், கலை இயக்குனர் தோட்டாதரணியால் அமைக்கப்பட்டு, வசனகாட்சிகள் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டன.

மேலும் பல கோடி ருபாய்க்கும் செலவில் நடனவீடு செட் அமைக்கப்பட்டு அதில் 15 நாட்களுக்கு மேலாக, புகழ்பெற்ற மும்பை நடன அழகிகள் ஆட, பிரபல நடன இயக்குனர் தாரா அவர்களின் நடன அமைப்பில் பாடல் படமாக்கப்பட்டது. 

இந்தப் படத்தின் கதையையும், தனது புதுவிதமான கதாபாத்திரத்தையும் கேட்டு கதாநாயகியாக நடிக்க சம்மதித்தார் நடிகை சதா. கவர்ச்சியிலும் காமெடியிலும் விருந்து படைக்கிறார். சதாவின் நகைச்சுவைக் காட்சிகள் புது அனுபவம் தரும்.


தொடர்ந்து படப்பிடிப்பில் இருக்கும் எலி ஏப்ரல் இறுதியில் அனைத்துப் பணிகளும் நிறைவு பெற்று மே மாதம் திரைக்கு வருகிறது. 

குழந்தைகள், பெண்கள் என அனைவரையும் பார்க்கும் வண்ணம் நகைச்சுவைக்கும் மட்டுமே முதலிடம் தந்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் இந்த கோடையில் 1000-க்கும் அதிகமாக அரங்குகளில் உலகெங்கும் வெளியாகிறது.

 


Post your comment

Related News
96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்
அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
அதோ அந்த பறவை போல டப்பிங்கில் பிசியான அமலாபால்
பிரபுதேவா எனது குரு - இந்துஜா
திருமணத்திற்கு பின் நமீதாவின் அகம்பாவம்
இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.!
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஷால் படத்தில் சன்னி லியோன்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions