வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்

Bookmark and Share

வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்

வடிவேலுவின் திரையுலகில் நகைச்சுவை கேரக்டரில் பல படங்கள் நடித்திருந்தாலும் நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றுக் கொடுத்த படம் இம்சை அரசன் 23ம் புலிகேசி. மெகா ஹிட்டான இப்படத்தை சிம்புதேவன்  இயக்கியிருந்தார்.

இப்படத்தின் இரண்டாம் பாகம் பல ஆண்டுகள் கழித்து எடுக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால் சிம்புதேவனுக்கும் வடிவேலுக்கும் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக படம் பாதியில் நின்றது. இதனால் பணம் போட்ட தயாரிப்பாளரான இயக்குனர் ஷங்கர் பிரச்சனையை தயாரிப்பாளர் சங்கத்திற்கு எடுத்து சென்றார்.

தயாரிப்பாளர் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தியும் நடிக்க சம்மதிக்காத வடிவேலுக்கு ரூபாய் 9 கோடியை நஷ்ட ஈடாக அளிக்க உத்தரவு போட்டது. இதற்கும் சம்மதிக்காத வடிவேலுக்கு சிவப்பு அட்டை கொடுக்கும் அளவிற்கு சென்ற நிலையில், வடிவேலு தனது முடிவை மாற்றிக்கொண்டு நடிக்க சம்மதித்தார்.

இதனால் பிரச்சனை ஓய்ந்து பட வேலைகள் ஆரம்பித்து மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த வடிவேலுவின் மறுபிரவேசம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்தாலும் அவர் இல்லாத நேரத்தில் வளர்ந்த மற்ற நகைச்சுவை நடிகர்களின் மத்தியில் கலக்கத்தை உண்டாக்கி உள்ளது.

வடிவேலுவை திரையில் பார்த்து பல வருடங்கள் ஆனாலும் சமுக வலைத்தளங்களில் அவர் இல்லாத பக்கமே இல்லை. ஆகையால் அவர் இத்தனை வருடங்கள் இல்லாதது மாதிரியே தெரியவில்லை என அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Post your comment





Related News
நயன்தாரா படம் பற்றிய வதந்தி! இயக்குனர் விளக்கம்
நயன்தாராவிற்கு இவர் ஜோடியா? ஷாக் ஆன ரசிகர்கள்
2017-ல் வெற்றி கனியை சுவைத்த 19 தமிழ் படங்கள் எவை தெரியுமா? - லிஸ்ட் இதோ.!
மீண்டும் வருவேன்; நம்புங்கள்! - ரசிகர்களுக்கு சிம்பு வெளியிட்ட வீடியோ
மெர்சல் விஜய் ரசிகர்களுக்கு ஒரு சோகமான தகவல்
வனமகன் ஹீரோயின் மெர்சல் படத்தை எங்கு பார்த்தார் தெரியுமா? போட்டோ உள்ளே
அடேங்கப்பா.. ரசிகர்கள் வைத்த மெர்சல் கட் அவுட்டுக்கே இவ்வளவு லட்சம் செலவா?
சட்டமன்றம் ஏங்குகிறது, பாராளுமன்றம் பதறுகிறது - பரபரப்பை கிளப்பும் ரசிகர்களின் மெர்சல் போஸ்டர்.!
திரை பிரபலங்களின் பாராட்டு மழையில் உரு
உயர்கல்வி படிப்பதில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து கூறும் `எய்தவன்'








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions