வடிவேலு மீது அவதூறு வழக்கிற்கு இடைக்கால தடை

Bookmark and Share

வடிவேலு மீது அவதூறு வழக்கிற்கு இடைக்கால தடை

கடந்த அக்டோபர் 12–ந்தேதி மதுரையில் நடிகர் வடிவேலு  பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, ‘காணாமல் போன கிணற்றை போல, காணாமல் போன நடிகர் சங்கத்தை கண்டுபிடிப்போம்’ என்று கூறினார். இந்த செய்தி பத்திரிகைகளில் வெளியானது. 

இதையடுத்து நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், நடிகர் வடிவேலு மீது கிரிமினல் அவதூறு வழக்கை தொடர்ந்தார். இந்த வழக்கு நாமக்கல் மாவட்ட செசன்சு கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ‘வருகிற 27–ந்தேதி வடிவேலு நேரில் ஆஜராக வேண்டும்’ என்று சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். இதையடுத்து, அவதூறு வழக்கை ரத்து செய்யவேண்டும் என்றும் அந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் நடிகர் வடிவேலு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வக்கீல்கள் தண்டபாணி, நீலகண்டன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள். இதையடுத்து, நாமக்கல் மாவட்ட கோர்ட்டில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த மனுவுக்கு பதிலளிக்க, ராஜேந்திரனுக்கு நோட்டீசு அனுப்பவும் உத்தரவிட்டார். வருகிற 27–ந்தேதி நாமக்கல் மாவட்ட கோர்ட்டில் நடிகர் வடிவேலு நேரில் ஆஜராக விலக்கு அளித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.


Post your comment





Related News
காவிரி மேலாண்மை அமைத்தே ஆக வேண்டும் - ரஜினிகாந்த் கொந்தளிப்பு.!
நடிகர் சங்க அறவழி போராட்டத்தில் தளபதி விஜய் - புகைப்படங்கள் இதோ.!
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கண்டன அறவழி போராட்டம். திரை உலகினருக்கு அழைப்பு!
காவேரி மேலாண்மை மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சனைகளுக்காக மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெறும் - நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன்
ஸ்ட்ரைக் தொடரும் தயாரிப்பாளர் சங்கம் திட்ட வட்ட அறிவிப்பு.!
ஸ்ரீதேவி திடீர் மரணம்! தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் !!.
நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் மரணம் - சோகத்தில் திரையுலகம்
கலை நிகழ்ச்சி பற்றி இவ்வளவு பேசற அஜித் காசு கொடுக்கலாமே - பிரபல நடிகர் ஓபன் டாக்.!
நடிகையை தொடர்ந்து பிரபல நடிகரையும் அசிங்கப்படுத்திய நடிகர் சங்கம்
மலேசியாவில் நடக்கவுள்ள நடிகர் சங்க நட்சத்திர கலை விழாவிற்கு தல அஜித் வருகிறாரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions