சந்திரமுகி பார்ட் 2வில் வடிவேலு – ரசிகர்கள் உற்சாகம்!

Bookmark and Share

சந்திரமுகி பார்ட் 2வில் வடிவேலு – ரசிகர்கள் உற்சாகம்!

இயக்குனர் பி. வாசு இயக்கத்தில் கன்னட ‘சூப்பர்ஸ்டார்’ ஷிவராஜ் குமார், வேதிகா நடிப்பில் சமீபத்தில் கன்னடத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றிருக்கும் படம் ஷிவலிங்கா.

இப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய பி. வாசு திட்டமிட்டுள்ளார். இப்படத்துக்கு தமிழில் ‘சந்திரமுகி 2’ என பெயரிடவும் அவர் முடிவு செய்துள்ளார்.

இதில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸும் நாயகியாக அனுஷ்காவும் நடிப்பார்கள் என சொல்லப்படுகிறது. மேலும் சந்திரமுகி முதல் பாகத்தில் காமெடியில் அசத்திய நடிகர் வடிவேலுவும் இப்படத்தில் நடிப்பார் என சொல்லப்படுகிறது. இதை படக்குழு விரைவில் அறிவிக்கவுள்ளது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions