ஆராதனா இந்தி பட பாடலுக்கு டூயட் ஆடிய வடிவேலு-சதா

Bookmark and Share

ஆராதனா இந்தி பட பாடலுக்கு டூயட் ஆடிய வடிவேலு-சதா

தெனாலிராமன் படத்திற்கு பிறகு வடிவேலு ஹீரோவாக நடித்து வரும் படம் எலி. சதா ஹீரோயினாக நடிக்கிறார். வடிவேலு, துப்பறியும் ஆய்வாளராக நடிக்கிறார்.

அவர் துப்பறிய போகும் இடங்களில் எல்லாம் அவர் மாட்டிக்கொண்டு செய்யும் சாகசங்களை எல்லாம் முழுக்க முழுக்க காமெடியாக இயக்கியிருக்கிறார் யுவராஜ் தயாளன்.

இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படம் பற்றிய தகவல்கள் புதிது புதிதாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இன்றைய தகவல் என்னவென்றால், 1969ம் ஆண்டு ராஜேஷ் கண்ணா, சர்மிளா தாகூர் நடிப்பில் இந்தியில் மட்டுமல்லாது இந்தியா முழுக்க வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ஆராதனா.

இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகின. அதிலும் குறிப்பாக ’மேரே சப்னோகி ராணி....’ என்ற பாடல் மாஸ் ஹிட்டானது. இப்போது இந்த பாடலுக்கு வடிவேலுவும், சதாவும் டூயட் பாடியுள்ளனர்.

இதற்காக ஆராதனா படக்குழுவினரிடம் முறையான அனுமதி பெற்று முழு நீள பாடலையும் எலி படத்தில் சேர்த்துள்ளனர். வடிவேலுவும், சதாவும் ஆடி, பாடும் டூயட் காட்சிகள் மூணாறில் படமாக்கப்பட்டுள்ளது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions