வடிவேலுவுடன் குத்தாட்டம்போட சதாவுக்கு சம்பளம் 25 லட்சம்

Bookmark and Share

வடிவேலுவுடன் குத்தாட்டம்போட சதாவுக்கு சம்பளம் 25 லட்சம்

வடிவேலு தற்போது ஹீரோவாக நடித்து வரும் படம் எலி. இந்தப் படத்தில் சதா வடிவேலுவுடன் குத்தாட்டம் போட்டார். இதற்காக அவருக்கு 25 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

வடிவேலுவுக்கும் குத்தாட்டத்துக்கும் ஒரு பொருத்தம் உண்டு. அவர் முதன் முறையாக ஹீரோவாக நடித்த இம்சை அரசன் 23ம் புலிகேசியில் தேஜா, ரிஷா, அபிநயஸ்ரீ ஆகியோருடன் குத்தாட்டம் ஆடினார்.

அதன் பிறகு ஹீரோவாக நடித்த இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படத்தில் அப்போது முன்னணியில் இருந்த ஸ்ரேயா குத்தாட்டம் போட்டார். இதற்காக அவருக்கு 50 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டது.

தற்போது அவர் நடித்து வரும் எலி படத்தில் சதா குத்தாட்டம் போட்டிருக்கிறார். இதற்காக சென்னை ஸ்டூடியோ ஒன்றில் போடப்பட்ட பிரமாண்ட செட்டில் சதா வடிவேலுவுடன் ஆடினார்.

பல முன்னணி நடிகைகள் ஆட மறுத்த நிலையில் சதா துணிந்து ஆடியிருக்கிறார். வடிவேலுவுடன் நடிக்கவும், ஆடவும் நடிகைகள் தயங்குவதற்கு காரணமே அவருக்கு ஜோடியாக நடித்தவர்களும், உடன் ஆடியவர்களும் அதன் பிறகு காணாமல் போய்விடுவார்கள்.

வடிவேலுவுடன் நடித்த பிறகும், ஆடிய பிறகும் மற்ற ஹீரோக்கள் அந்த நடிகையுடன் நடிக்க தயங்குகிறார்கள். இந்த சென்டிமென்டை சதா உடைக்கிறாரா என்று பார்க்கலாம்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions