3 மணி நேரம் 20 நிமிடங்கள் ஓடும் எலி

Bookmark and Share

3 மணி நேரம் 20 நிமிடங்கள் ஓடும் எலி

தெனாலிராமன் படத்தை இயக்கிய யுவராஜ் தயாளன் இயக்கத்தில் வடிவேலு மீண்டும் நடித்துள்ள படம் எலி. 1960களில் நடப்பது போல் கதை அமைக்கப்பட்ட எலி படம் இந்த மாதம் வெளியாவதாக சொல்லப்பட்டது. சமீபத்தில் நடைபெற்ற எலி படத்தின் பிரஸ்மீட்டிலும் இதை உறுதி செய்தார் வடிவேலு.

 இந்த மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று எலி படம் வெளியாகவில்லை. ஜூன் முதல் வாரமான 5 ஆம் தேதி ரிலீஸ் என்று சொல்லப்பட்டது. அதற்கு அடுத்த வாரம் அதாவது ஜூன் 12 அன்று சந்தானம் ஹீரோவாக நடித்த இனிமே இப்படித்தான் படம் வெளியாக உள்ளது.

அதற்கு அடுத்த வாரத்தில் விவேக் கதாநாயகனாக நடித்த பாலக்காட்டு மாதவன் படம் வெளியாக உள்ளது. எனவே மற்ற காமெடியன்களின் படம் வெளியாவதற்கு முன்னதாக, ஜூன் 5 ஆம் தேதி அன்று எப்படியாவது எலி படத்தை ரிலீஸ் பண்ண வேண்டும் என்று திட்டமிட்டு வேலைகளை முடுக்கிவிட்டனர்.

லேட்டஸ்ட் தகவலின்படி... ஜூன் 5 ஆம் தேதி எலி படம் வெளிவர வாய்ப்பில்லை என்கிறார்கள். காரணம்... தற்போதைய நிலையில் எலி படத்தின் இறுதி வடிவம்... அதாவது ஃபைனல் ஃபுட்டேஜ் சுமார் 3 மணி நேரம் 20 நிமிடங்கள் இருக்கிறதாம்.

சுமார் 50 நிமிடத்துக்கான காட்சிகளை கத்தரி போட்டால்தான் மக்கள் ரசிக்கும்படியான படமாக இருக்கும் என்பது இயக்குநரின் கருத்து. வடிவேலுவோ அதற்கு உடன்படவில்லையாம்.

வேண்டுமானால் பத்து அல்லது பதினைந்து நிமிடக்காட்சிகளை மட்டும் வெட்டிக்கொள்ளுங்கள் என்கிறாராம். இதில் இறுதி முடிவு எடுத்த பிறகே ரிலீஸ் தேதி அறிவிக்கப்படுமாம்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions