வடிவேலுவுக்கு ஜோடியாக நடிக்க மறுத்த சானியதாரா!

Bookmark and Share

வடிவேலுவுக்கு ஜோடியாக நடிக்க மறுத்த சானியதாரா!

இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்துக்கு பிறகு தம்பி ராமைய்யா இயக்கத்தில் வடிவேலு நாயகனாக நடித்த படம் இந்திரலோகத்தில் நா.அழகப்பன். இந்த படத்தில் அவருடன் ஒரு பாடலுக்கு சிவாஜி கேர்ள் ஸ்ரேயா நடனமாடியிருந்தார்.

விளைவு, காமெடியனுடன் அவர் நடித்ததை காரணம் காட்டி அதையடுத்து மற்ற ஹீரோக்கள் அவருக்கு சான்ஸ் கொடுக்கவில்லை. அதனால் பின்னர் ஸ்ரேயாவின் மார்க்கெட்டும் சரிந்தது.

அதன்காரணமாக, இப்போது காமெடி நடிகர்களுடன் ஜோடியாக நடிக்கவே தென்னிந்திய நடிகைகள் தயங்கி வருகின்றனர். அந்த வகையில், வடிவேலுவுடன் தெனாலிராமன் படத்தில் நடித்த மீனாட்சி தீக்ஷித்துக்கும் பின்னர் சரியானபடி படங்கள் இல்லை.

அதனால் இப்போது வடிவேலு நடித்து வரும் எலி படத்துக்கு இன்னமும் ஹீரோயினி கிடைக்காமல் அல்லாடிக்கொண்டிருக்கிறார் டைரக்டர். அந்த வகையில், மேல்தட்டு ஹீரோயினிகள் யாரும் உடன்பட மாட்டார்கள் என்பதால் பனிவிழும் மலர்வனம் உள்பட சில படங்களில் நடித்தபடி வளர்ந்து வரும் நடிகையான சானியதாராவை சமீபத்தில் அழைத்து பேசியிருக்கிறார்கள்.

அப்போது, எலி படத்தில் சதா ஒரு பாட்டுக்கு ஆடுகிறார். ஆனால் கதாநாயகிதான் இன்னும் முடிவாகவில்லை என்று சொல்லி வடிவேலுவுடன் நடித்தால் அதிக சம்பளம் தருவதாகவும் சொல்லியிருக்கிறார்.

ஆனால், அவருடன் நடித்தால் பின்னர் மற்ற ஹீரோக்கள் என்னை ஓரங்கட்டி விடுவார்கள். அதனால் இந்த படத்தோடு என் மார்க்கெட் அவுட்டாகி விடும் என்று சொன்ன சானியதாரா, என்னை விட்டு விடுங்கள் என்று வடிவேலுவின் யூனிட்டுக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டு விட்டு வந்து விட்டாராம்.

இதனால் அதிர்ச்சியடைந்த டைரக்டர் யுவராஜ், படப்பிடிப்பு நடத்திக்கொண்டே கதாநாயகி வேட்டையையும் ஒருபக்கம் முடுக்கி விட்டுள்ளார். ஒருவேளை தென்னிந்திய நடிகைகள் யாருமே சிக்கவில்லை என்றால், மீனாட்சி தீக்ஷித்தை போன்று மும்பை சென்று அங்குள்ள நடிகை யாரையாவது புக் பண்ணவும் முடிவு செய்திருக்கிறாராம் யுவராஜ்.


Post your comment





Related News
பெண் சிசுக்கொலை கதையா? - நயன்தாராவின் இன்னொரு திகில் படம்
விஸ்வாசம் படத்தின் கதை இதுவா?
விஸ்வாசம் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியீடு
இத்தனை கோடி சம்பளம் கேட்டாரா நயன்தாரா? அதிர்ச்சியான முன்னணி தயாரிப்பு நிறுவனம்
விஸ்வாசம் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
நயன்தாராவை அம்மா என்றே அழைத்து வரும் மானஸ்வி
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions