வடிவேலு நடிக்க மறுத்த கம்பெனிகளில் சூரி!

Bookmark and Share

வடிவேலு நடிக்க மறுத்த கம்பெனிகளில் சூரி!

தமிழ் சினிமாவில் வடிவேலு இடத்தை அத்தனை எளிதில் யாராலும் பிடித்து விட முடியாது. ஆனால், இப்போது வடிவேலு காமெடியனாக நடிக்க மறுத்து வரும் நிலையில், அவரைப்போன்று நடித்து அவர் இடத்தை பிடித்து விட வேண்டும் என்று புரோட்டா சூரி கடுமையான முயற்சி எடுத்து வருகிறார்.

அவரது இந்த மனநிலையை புரிந்து கொண்ட இயக்குனர்களும், அவருக்கான காமெடி ட்ராக்கை வடிவேலு பாணியிலேயே உருவாக்குகின்றனர். இந்த நிலையில், தெனாலிராமனுக்கு பிறகு மீண்டும் காமெடியனாக வடிவேலுவை நடிக்க வைக்க பலர் முய்ற்சி எடுத்தனர்.

ஆனால் அவர் அந்த வாய்ப்புகளை ஏற்கவில்லை. மீண்டும் காமெடியனாக நடிக்கும் ஐடியாவே இல்லை என்று திட்டவட்டமாக செல்லி விட்டார். அதனால், வடிவேலுவை நடிக்க வைக்க முயற்சி எடுத்த சில மெகா கம்பெனிகளை தற்போது சூரி தொடர்பு கொண்டு அந்த வாய்ப்பை கேட்டு வருகிறாராம். அதோடு, வடிவேலு பாணியில் நடித்து நீங்கள் எதிர்பார்த்த ரிசல்ட்டை கொடுப்பேன் என்றும் உத்தரவாதம் கொடுக்கிறாராம்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions