டைரக்டர்களிடம் கடிந்து கொள்ளும் வடிவுக்கரசி!

Bookmark and Share

டைரக்டர்களிடம் கடிந்து கொள்ளும் வடிவுக்கரசி!

கன்னிப்பருவத்திலே, முதல் மரியாதை, கருத்தம்மா, படையப்பா உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர் வடிவுக்கரசி. சமீபகாலமாக சினிமாவில் அவருக்கான வாய்ப்புகள் குறைந்து விட்டது.

அதனால் சின்னத்திரையில் தொடர்ந்து நடித்து வருகிறார் வடிவுக்கரசி. அந்த வகையில், அலைகள், விக்ரமாதித்தன், ராஜ ராஜேஸ்வரி, திருமதி செல்வம், வெள்ளைத்தாமரை, வம்சம் என 15க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்து விட்டார். தொடர்ந்து பிசியாக நடித்துக்கொண்டும் வருகிறார்.

ஆனால், தான் நடிக்க வேண்டிய காட்சிகளில் பக்கம் பக்கமாக வசனங்கள் இருந்தாலும் அவற்றை ஒருமுறை வாங்கி படித்து விட்டு அப்படியே கேமரா முன்பு வந்து நடிக்கிறாராம் வடிவுக்கரசி.

அதைப்பார்த்து மணிக்கணக்கில் டயலாக்கை மனப்பாடம் செய்து நடிக்கும் இளவட்ட நடிகைகளெல்லாம் ஆச்சர்யத்தில் விழி விரிந்து நிற்கிறார்களாம். ஆனால் இப்படி சிங்கிள் டேக்கில் ஓகே செய்து வரும் வடிவுக்கரசி, யாராவது புதுமுக டைரக்டர்கள், தான் சிங்கிள் டேக்கில் சரியாக நடித்து விட்டபோதும் மீண்டும் மீண்டும் ரீ-டேக் கேட்டு வாங்கிக்கொண்டேயிருந்தால் கடுப்பாகி விடுகிறாராம்.

எதற்காக திரும்பத்திரும்ப நடிக்க சொல்கிறீர்கள்? என் நடிப்பில் என்னை குறையை கண்டீர்கள்? என்று டைரக்டர்களிடம் வரிந்துகட்டி விடுகிறாராம். இதனால் சில புதியவர்கள் வடிவுக்கரசியிடம் ரீ-டேக் கேட்டு வாங்கவே பயப்படுகிறார்களாம்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions