நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடவில்லை: வாகை சந்திரசேகர் அறிக்கை

Bookmark and Share

நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடவில்லை: வாகை சந்திரசேகர் அறிக்கை

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு அடுத்த மாதம் (ஜூலை) 15-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தல் தொடர்பாக தற்போது சங்க பொருளாளராக இருந்து வரும் வாகை சந்திரசேகர் ஒரு அறிக்கை விடுத்து இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- 

‘ஒவ்வொரு நடிகருக்கும் நடிகர் சங்கம் தாய் வீடு. அரசியலுக்கு அப்பாற்பட்ட அமைப்பு. நடிகருக்கு அரசியல் என்பது அவருடைய சுதந்திரம். நாட்டில் உள்ள எல்லா அமைப்புகளுக்கும் அரசின் ஆதரவு தேவை. அரசிடம் தங்கள் தேவைகளை கேட்க உரிமை உண்டு. ஆனால், அமைப்புக்குள் அரசியலை நுழைப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை.

சங்கத்தின் தலைவரான சரத்குமார், ஜெயலலிதாவின் அரசியலை புகழ்ந்து தள்ளினார். துதி பாடினார். அதோடு நிற்கவில்லை. சட்டப்பேரவையிலும், பொதுக்கூட்டங்களிலும் கருணாநிதியை தாக்கி பேசினார்.

நான் கருணாநிதியிடம் வைத்திருக்கும் அன்பு, பாசம், விசுவாசம் இவற்றை சீண்டிப்பார்க்கும் எவரோடும் என் பயணம் இருக்காது. எனவே நடைபெற இருக்கும் நடிகர் சங்க தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை.’’ 


Post your comment





Related News
விவேக்கின் "எழுமின்" படத்திற்காக தனுஷ் பாடும் பாடல்..!
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
விமலின் விபரீத முடிவுக்கு பயந்த இயக்குனர் பூபதி பாண்டியன்
‘மன்னர் வகையறா’ தமிழக ரைட்ஸை கைப்பற்றிய 'சினிமா சிட்டி'..!
விஜய் அரசியலில் குதிப்பாரா? எஸ்.ஏ.சந்திரசேகரன் பேட்டி
என் மூச்சு நின்று விடும் ! விஜயின் அப்பா உணர்ச்சிவசம்
தந்தையர் தினத்தில் விஜய் குடும்பத்தில் ஒரு ஸ்பெஷல்
விஜயின் அப்பாவால் பெரிய ஹீரோவாகிய பிரபலம்! யார் அவர்
என்னை பிரித்து விட்டார்கள், விஜய்யின் தந்தை பரபரப்பான பேச்சு
விஜய்யின் தந்தைக்கு ஏற்பட்ட சோகம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions