'வை ராஜா வை' படத்தில் லைன் கட்டி நிற்கும் வாரிசுகள்

Bookmark and Share

'வை ராஜா வை' படத்தில் லைன் கட்டி நிற்கும் வாரிசுகள்

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியுள்ள வை ராஜா வை படத்தில் வாரிசு பட்டாளமே பணியாற்றியுள்ளது. '3' படத்தை அடுத்து ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியுள்ள படம் வை ராஜா வை. சூதாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த், டாப்ஸி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மேலும் விவேக், டேனியல் பாலாஜி, காயத்ரி ரகுராம், மனோபாலா, எம்.எஸ், பாஸ்கர் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர்.கோலிவுட் வந்ததில் இருந்து வெற்றியை சுவைக்காத கௌதம் கார்த்திக் இந்த படத்தை பெரிதும் நம்பியுள்ளார்.

படத்தில் கௌதம், ப்ரியா ஆனந்த் இடையேயான கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க் அவுட் ஆகியுள்ளதாம்.மனைவியின் படத்தில் தனுஷ் கொக்கி குமாராக ஒரு காட்சியில் வந்துவிட்டு செல்கிறார். வை ராஜா வை ஏப்ரல் 24ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வை ராஜா வை படத்தில் வாரிசு பட்டாளமே உள்ளது. படத்தை இயக்கியது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள், ஹீரோ நடிகர் கார்த்திக்கின் மகன், இசையமைப்பாளர் யுவன் இசைஞானியின் மகன், காயத்ரி பிரபல நடன இயக்குனர் ரகுராமின் மகள், பாடல் ஆசிரியர் மதன் கார்க்கி வைரமுத்துவின் மகன் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
அதோ அந்த பறவை போல டப்பிங்கில் பிசியான அமலாபால்
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
பாடல் காப்புரிமை சம்பந்தப்பட்ட வழக்கு - இளையராஜா மீண்டும் எச்சரிக்கை
கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி
அப்போது துணிச்சல் இல்லை - இப்போது பயம் இல்லை : சின்மயி
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions