'வை ராஜா வை' யில் 5 இயக்குனர்கள்

Bookmark and Share

'வை ராஜா வை' யில் 5 இயக்குனர்கள்

ரஜினிகாந்தின் மூத்த மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ், '3' படத்திற்குப் பிறகு இயக்கியுள்ள படம் 'வை ராஜா வை'. இந்தப் படம் இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது.

படத்தில் ஏற்கெனவே 'கொக்கி' குமார் ஆக ஒரு கேமியோ கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்திருக்க, தற்போது புதிதாக ஒரு பாடலுக்கு இயக்குனர், நடிகர் எஸ்.ஜே.சூர்யாவை நடனமாட வைத்திருக்கிறார்கள். இவருடன் சேர்த்தால் இப்போது 'வை ராஜா வை' படத்தில் மொத்தம் ஐந்து இயக்குனர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்கள்.

ஒருவர் படத்தின் இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ், அடுத்தவர் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், இவர் 'வேலையில்லா பட்டதாரி' படத்தின் இயக்குனர். படத்தில் நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள மனோ பாலா முன்னாள் இயக்குனர்.

அப்பா கதாபாத்திரத்தில் இயக்குனர் வசந்த் அறிமுகமாகிறார். இவர்களோடு புதிய வரவாக எஸ்.ஜே.சூர்யா. ஆக, மொத்தம் ஐந்து இயக்குனர்கள் 'வை ராஜா வை' படத்தில் இடம் பெற்றுள்ளனர்.

படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தில் நடித்துள்ள அனைவருமே ஒளிப்பதிவாளர் வேல்ராஜை அதிகமாகவே புகழ்ந்து தள்ளினர். அதிலிருந்தே அவருடைய ஈடுபாடு படத்தில் எந்த அளவிற்கு இருந்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

'3' படத்திற்கும் வேல்ராஜ்தான் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
மீண்டும் ரவிக்குமார், ரகுலுடன் இணைந்த சிவகார்த்திகேயன்
நந்தாவும், ரமணாவும் என்னை அவமானப்படுத்தினார்கள் - பார்த்திபன் பரபரப்பு பேட்டி
விவசாயியாக நடிக்கும் சிவகார்த்திகேயன் - இயக்குநர் தகவல்
ரஜினியின் ஆதங்கத்துக்கு இளையராஜா பதில் - சூப்பர் ஸ்டார்னா ரஜினி தான் என புகழாரம்
படம் ரிலீஸானது - சிம்பு கோரிக்கையை ஏற்காத ரசிகர்கள் பேனர் வைத்து பால் ஊற்றினார்கள்
சினிமா வசூலை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள் - கார்த்திக் சுப்புராஜ் காட்டம்
வந்தா ராஜாவாதான் வருவேன் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
மீண்டும் ரஜினியுடன் இணையும் கார்த்திக் சுப்புராஜ்
ஆரவ்வின் அடுத்த படம் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் - சரண் இயக்குகிறார்
ரஜினியை நான் இயக்கும் படம் விசில் பறக்கும் - ராஜமவுலி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions