யு சான்றிதழ் பெற்ற வை ராஜா வை: கோடையில் குளிர்விக்க வருகிறது

Bookmark and Share

யு சான்றிதழ் பெற்ற வை ராஜா வை: கோடையில் குளிர்விக்க வருகிறது

‘3’ படத்திற்கு பிறகு ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி வரும் புதிய படம் ‘வை ராஜா வை’. இப்படத்தில் கௌதம் கார்த்திக், டாப்சி, பிரியா ஆனந்த் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.

இந்நிலையில், இப்படத்துக்கு சான்றிதழ் பெறுவதற்காக சென்சார் போர்டு நிர்வாகிகளுக்கு இப்படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. படத்தை பார்த்த சென்சார் போர்டு நிர்வாகிகள் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

இதுகுறித்து இப்படத்தின் இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ் கூறும்போது, ‘வை ராஜா வை’ படம் யு சான்றிதழ் வாங்கியுள்ளது. படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும். 2015 கோடையில் உங்களை குளிர்விக்கும் படமாக இது இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இப்படத்தை ஏ.ஜி.எஸ்.நிறுவனம் மிகப் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நடிகர் விவேக்கும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

 


Post your comment





Related News
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
பாடல் காப்புரிமை சம்பந்தப்பட்ட வழக்கு - இளையராஜா மீண்டும் எச்சரிக்கை
கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி
அப்போது துணிச்சல் இல்லை - இப்போது பயம் இல்லை : சின்மயி
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
சீமராஜா படத்தில் எங்கள் முந்தைய படங்களில் இருந்து சற்று மேம்பட முயற்சித்திருக்கிறோம் - இயக்குனர் பொன்ராம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions