வை ராஜா வை ஏப்ரல் மாதம் வெளிவருகிறது!

Bookmark and Share

வை ராஜா வை ஏப்ரல் மாதம் வெளிவருகிறது!

ரஜினியின் மூத்த மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ், 3 படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

ஆனாலும் நிதானமாக கால அவகாசம் எடுத்துக் கொண்டு அடுத்து வை ராஜா வை என்ற படத்தை இயக்கினார். கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் ஜோடியாக நடித்த இப்படத்தை கல்பாத்தி அகோரம் தயாரித்துள்ளார்.

வை ராஜா வை படத்தின் படப்பிடிப்பு கோவா உட்பட பல ஊர்களில் நடைபெற்றது. படப்பிடிப்பு முடிந்த கையோடு எடிட்டிங், டப்பிங், ரீரெக்கார்டிங் பணிகளும் முடிவடைந்தன.

வை ராஜா வை படத்தை கடந்த டிசம்பரிலேயே ரிலீஸ் செய்ய விரும்பினார் ஐஸ்வர்யா தனுஷ். அதற்கு முன் அனேகன் படத்தை ரிலீஸ் செய்துவிட வேண்டும் என்று விரும்பினார் கல்பாத்தி அகோரம்.

அதன்படி சில வாரங்களுக்கு முன் அனேகன் படத்தை ரிலீஸ் செய்தார். இப்போது வை ராஜா வை படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார். ஏப்ரல் மாதம் வை ராஜா வை வெளியாகிறது. விரைவில் அதிகாரபூர்வமாக தேதியை அறிவிக்க இருக்கிறாராம்  கல்பாத்தி அகோரம்.


Post your comment





Related News
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
சீமராஜா படத்தில் எங்கள் முந்தைய படங்களில் இருந்து சற்று மேம்பட முயற்சித்திருக்கிறோம் - இயக்குனர் பொன்ராம்!
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
கமல் அழகாக இருந்ததால் தான் சப்பாணியாக நடிக்க வைத்தேன் - பாரதிராஜா
சீமராஜா படத்தில் கட்டுப்பாடுகளை உடைத்து சுதந்திரம் கொடுத்தார் ஆர்.டி.ராஜா - முத்துராஜ் மகிழ்ச்சி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions