'வை ராஜா வை', '21' படத்தின் காப்பியா ?

Bookmark and Share

'வை ராஜா வை',  '21' படத்தின் காப்பியா ?

தமிழ்த் திரையுலகில் அப்பட்டமான காப்பி படங்கள், இன்ஸ்பிரேஷன் படங்கள், தழுவல் படங்கள் என பல ஹாலிவுட் படங்களைக் காப்பியடித்து படங்களை இயக்குவது ஒரு காலத்தில் இருந்தது.

சமீப காலத்தில் கொரிய மொழிப் படங்களையும், மற்ற உலக மொழிப் படங்களையும் காப்பியடித்து படங்களை எடுத்து அவற்றிற்கு விருதுகளைப் பெறும் விவகாரமும் இங்கு நடந்து வருகிறது.

இது பற்றிய விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாகவே எழுந்து வருகின்றன. அப்படி ஒரு விமர்சனத்தை சமீபத்தில் ஏற்படுத்தியுள்ள படம் 'வை ராஜா வை'.

ரஜினிகாந்த் மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியுள்ள இந்தப் படம் ஹாலிவுட்டில் 2008ம் ஆண்டு ராபர்ட் லுகெடிக் இயக்கிய வெளிவந்த '21' என்ற படத்தில் அப்பட்டமான தழுவல் என்ற பேச்சு தற்போது எழுந்துள்ளது.

அதி புத்திசாலி மாணவனான நாயகன் லாஸ்வேகாஸ் நகரில் உள்ள சூதாட்ட கிளப்புகளில் அவருடைய பேராசிரியரால் அழைத்துச் செல்லப்பட்டு சூதாட்டம் ஆட வைக்கப்படுகிறார்.

அவருடைய கணக்குத் திறமையால் பல டாலர்கள் சம்பாதிக்க ஆரம்பிக்கிறார்கள். இதனால் சூதாட்ட கிளப்புகளில் பிரச்சனைகள் எழ, அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் '21' படத்தின் கதை.

'வை ராஜா வை' படத்தின் போஸ்டர் டிசைன்கள், டிரைலர், கதாபாத்திரங்கள், மற்றும் கதைக் களம் ஆகியவற்றைப் பார்க்கும் போது '21' படத்துடன் அதிகமாகவே ஒத்துப் போகிறது.

ஐஸ்வர்யா தனுஷ், 'வை ராஜா வை' படத்தை ஹாலிவுட் படம் போல எடுத்திருக்கிறார் என்று சிலர் பாராட்டி வருகிறார்கள். இன்னும் சில நாட்களில் இந்தப் படம் வெளியாக உள்ளது. அப்போது உண்மை என்ன என்பது தெரிந்துவிடும்.

 


Post your comment





Related News
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
சீமராஜா படத்தில் எங்கள் முந்தைய படங்களில் இருந்து சற்று மேம்பட முயற்சித்திருக்கிறோம் - இயக்குனர் பொன்ராம்!
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
கமல் அழகாக இருந்ததால் தான் சப்பாணியாக நடிக்க வைத்தேன் - பாரதிராஜா
சீமராஜா படத்தில் கட்டுப்பாடுகளை உடைத்து சுதந்திரம் கொடுத்தார் ஆர்.டி.ராஜா - முத்துராஜ் மகிழ்ச்சி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions