இசை வெளியாகியும், வெளியாகாத படங்கள்...!

Bookmark and Share

இசை வெளியாகியும், வெளியாகாத படங்கள்...!

தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் என அடுத்தடுத்து பண்டிகை காலமாகவே வந்து கொண்டிருந்தால் இடைப்பட்ட வாரங்களில் சில படங்கள் வெளியாகாமல் தள்ளிப் போய்க் கொண்டேயிருக்கின்றன.

ஒரு படத்தைப் பொறுத்தவரையில் அந்தப் படத்தின் இசை வெளியீடு நடந்து விட்ட பிறகு அடுத்த ஐம்பது நாட்களுக்குள் அந்தப் படம் வெளியானால்தான் நன்றாக இருக்கும். இல்லையென்றால், அந்தப் படம் கொஞ்சம் தாமதமாகி திரையில் பார்க்கும் போது, ஏற்கெனவே பாடல்களைப் பலமுறை கேட்டுவிட்டதால் ஏதோ ஒரு பழைய படத்தைப் பார்த்த ஞாபகமே வரும்.

அப்படி சில படங்கள் இசை வெளியீடு நடந்தும் சில காரணங்களால் ஏன் இன்னும் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படாமலே இருக்கின்றன. அவை எப்போது வரும் என்பதை சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்களே இன்னும் அறிவிக்காமல் இருக்கின்றன.

அப்படிப் பார்த்தால், கௌதம் கார்த்திப், பிரியா ஆனந்த் நடித்து யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியுள்ள 'வை ராஜா வை', விஜய்சேதுபதி, விஷ்ணு விஷால், நந்திதா, ஐஸ்வர்யா நடித்து யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் சீனு ராமசாமி இயக்கியுள்ள 'இடம் பொருள் ஏவல்', டிசம்பரில் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்ட சித்தார்த்தின் 'எனக்குள் ஒருவன்', பல மாதங்களாகக் கிடப்பில் இருக்கும் 'பூலோகம்', ஸ்ரீகாந்த், சந்தானம் நடித்துள்ள 'நம்பியார்', விமல் நடித்துள்ள 'ரெண்டாவது படம்', சேது, சந்தானம் நடித்துள்ள 'வாலிப ராஜா', இவற்றோடு இன்னும் சில படங்கள் எப்போது வெளியாகும் என்று தெரியாமலே இருக்கின்றன.

பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரத்தில் பிளஸ் டூ பரீட்சை ஆரம்பமான பிறகு படங்கள் வெளியாவது குறைந்து விடும். ஏப்ரலில் பல பெரிய படங்கள் இப்போதே வரிசை கட்டி நிற்க ஆரம்பித்து விட்டன. அப்படியென்றால் மேற் சொன்ன படங்கள் எப்போது வெளி வரும் என்று சம்பந்தப்பட்டவர்கள் அறிவிப்பார்களா...?


Post your comment





Related News
அதோ அந்த பறவை போல டப்பிங்கில் பிசியான அமலாபால்
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
பாடல் காப்புரிமை சம்பந்தப்பட்ட வழக்கு - இளையராஜா மீண்டும் எச்சரிக்கை
கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி
அப்போது துணிச்சல் இல்லை - இப்போது பயம் இல்லை : சின்மயி
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions