ஹலோ... நான் பேய் பேசுறேன்!

Bookmark and Share

ஹலோ... நான் பேய் பேசுறேன்!

கடந்த சில வருடங்களாகவே  தமிழில் பேய்ப்படங்கள் வெற்றியடைந்து வருவதால் கோலிவுட்டில் பேய் சீசன் நிலவிவருகிறது. அதை மேலும் நீட்டிப்பதுபோல் இப்போது 'காஞ்சனா 2' படம் வெற்றியடைந்துள்ளது.

இதுவரை 35 கோடிக்கு மேல் வசூல் செய்த காஞ்சனா -2 படத்தின் அதிரடி வெற்றியால் இன்னும் பல பேய்ப்படங்களுக்கு பூஜை போடப்பட்டுள்ளது. 'அரண்மனை' மூலம் சுந்தர்.சியும் ஒரு பேய்ப்படத்தை எடுத்தார்.

அப்படத்தின் மாபெரும் வெற்றி காரணமாக விரைவில் 'அரண்மனை' படத்தின் 2ம் பாகமும் உருவாகவிருக்கிறது. இந்நிலையில் தனது 'அவ்னி சினிமேக்ஸ்' பட நிறுவனம் மூலம் புதிய படம் ஒன்றை தயாரிக்க உள்ளார் இயக்குனர் சுந்தர்.சி.  

அவரது உதவியாளரான புதுமுக இயக்குனர் ஒருவர் இயக்கும் இப்படத்திற்கு ’ஹலோ... நான் பேய் பேசுறேன்!’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.  வைபவ் ஹீரோவாக நடிக்கிறார்.

ஓவியா, ஐஸ்வர்யா ராஜேஷ் என இரண்டு பேரும் இப்படத்தில்  கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.  கீழே கிடக்கும் செல்போன் ஒன்றை எடுக்கும் ஹீரோவுக்கு அதன் மூலம் பேய் பிடிக்க, அதன் பிறகு நடக்கும் காமெடி கலாட்டாவே இப்படத்தின் கதைக்களமாம்.  எந்தப் படத்திலிருந்து சுட்டதுன்னு தெரியலையே.... கூடிய சீக்கிரம் கண்டுபிடிச்சுடுவோம்.


Post your comment





Related News
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
தளபதி விஜய் குறித்து ஸ்ரீரெட்டி கூறிய கருத்து..!
ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசிய முன்னணி தமிழ் நடிகை
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ
சிம்புவையே பதில் சொல்ல முடியாத அளவிற்கு கேள்வி கேட்ட ஸ்ரீரெட்டி- என்ன கேள்வி பாருங்க
ஆணவக்கொலை பற்றிய கதை புதுமுகங்களின் அணிவகுப்பில் "குட்டி தேவதை"..!
ஸ்ரீரெட்டியின் வலையில் அடுத்ததாக சிக்கிய பிரபல நடிகர்! லீலைகளை வெளியிட்டு கெட்ட வார்த்தையில் திட்டிய ஸ்ரீரெட்டி
ஸ்ரீரெட்டியின் நிலைமைக்கு காரணம் இந்த பிரபல முன்னணி நடிகை தானாம்- உண்மையை கூறியுள்ள ஸ்ரீரெட்டி
இந்த விஜய்க்கு ஒரே நாளில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி! ரசிகர், ரசிகைகள் சோகம்
முதலமைச்சர் மகனாக நடிகர் கார்த்தி?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions