வைகை எக்ஸ்பிரஸ்..ட்ருலைஸ் படத்தின் காப்பியா?

Bookmark and Share

வைகை எக்ஸ்பிரஸ்..ட்ருலைஸ் படத்தின் காப்பியா?

இரண்டு கதாநாயகிகளுடன் என் வழி தனி வழி படத்தில் நடித்த  ஆர்.கே. தற்போது நடிக்கும் வைகை எக்ஸ்பிரஸ் படத்திலோ நான்கு கதாநாயகிகளுடன் நடிக்கிறார். என் வழி தனி படத்தை அடுத்து ஷாஜி கைலாசுடன் ஆர்கே  மீண்டும் இணைந்துள்ள படம் 'வைகை எக்ஸ்பிரஸ்'.

இந்தப் படத்தில் ஆர்.கே.யுடன் நீத்து சந்திரா, கோமல் சர்மா, இனியா, சுஜா வாருன்னி என நான்கு கதாநாயகிகள் நடிக்கிறார்கள்.  முழுக்க முழுக்க ஒரு ரயிலில் நடக்கும் சம்பவங்களை வைத்து இப்படம் தயாராகிறது.

அதற்காக ரயில் பெட்டி செட் போடப்பட்டு இப்படத்தின் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ரயில் பெட்டி மட்டுமல்ல மற்றும் ரயில் நிலையம் செட்டும் அமைத்து இப்போது அதில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

வைகை எக்ஸ்பிரஸ் படத்தில் நடிகையாகவே நடிக்கிறார் இனியா. கதைப்படி வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏசி கோச்சில் 3 இளம் பெண்களுடன் இனியாவும் பயணிக்கிறார்.

அப்போது எதிர்பாராத விதமாக ஒரு சம்பவம் நடைபெறுகிறது.  அதாவது தீவிரவாதிகள் அந்த ரெயிலையே கடத்துகின்றனர். அதில் நடிகையான இனியாவும் மாட்டிக் கொள்கிறார்.  

அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி வரும் இப்படத்தில் தீவிரவாதிகளிடமிருந்து ரயிலை காப்பாற்றுகிற வீரனாக ஆர்கே நடிக்கிறாராம். ட்ருலைஸ் ஆங்கிலப்படத்தின் நெடி அடிக்குதே பாஸ்...!


Post your comment





Related News
வைகைப்புயல் வடிவேலு அவர்களுக்கு ஒரு திறந்த கடிதம்...!
வைகை எக்ஸ்பிரஸ் படத்தின் தபால்தலை வெளியீடு! நடிகர் ஆர் கே யின் புது முயற்சி...
எல்லாம் அவன் செயல் படத்தை விட பத்து மடங்கு விறுவிறுப்பாக இருக்கும் வைகை எக்ஸ்பிரஸ்! - நடிகர் ஆர்கே
ஆர்.கேவை வைத்து ஷாஜி கைலாஷ் இயக்குவது சுரேஷ்கோபி பட ரீமேக் தானா..?
வைகை எக்ஸ்பிரஸ் பூஜை - வராமல் டிமிக்கி கொடுத்த இனியா
முழுக்க முழுக்க ரெயிலிலேயே படமாகும் வைகை எக்ஸ்பிரஸ்
பேமிலி இமேஜ் தேவையில்லை- சுவாசிகா
தமிழில் ரீமேக் ஆகும் தெலுங்கு வேங்கடாத்திரி எக்ஸ்பிரஸ்
சென்னை எக்ஸ்பிரஸ்,க்ரீஷ் 3 வசூலை முறியடித்தது ‘தூம் 3’..!
சல்மான்கானின் படத்துக்கு நாமம் போட்ட‌ ஷாருக்கானின் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions