முழுக்க முழுக்க ரெயிலிலேயே படமாகும் வைகை எக்ஸ்பிரஸ்

Bookmark and Share

முழுக்க முழுக்க ரெயிலிலேயே படமாகும் வைகை எக்ஸ்பிரஸ்

ஆர்.கே.நடிப்பில் உருவாகும் புதிய படம் ‘வைகை எக்ஸ்பிரஸ்’. இப்படத்தை ‘எல்லாம் அவன் செயல்’, ‘என் வழி தனி வழி’ ஆகிய படங்களை இயக்கிய ஷாஜி கைலாஷ் இயக்குகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு நீது சந்திரா இப்படத்தில் நடிக்கிறார். இதில் இவருக்கு இரட்டை வேடம்.

சென்னையிலிருந்து மதுரை நோக்கி செல்லும் வைகை எக்ஸ்பிரசில் நடக்கும் கதையை மையக்கருவாக வைத்து படத்தை எடுக்கவுள்ளனர். இதன் படப்பிடிப்பை முழுக்க முழுக்க ரெயிலிலேயே படமாக்கவுள்ளனர். இதற்காக தெற்கு ரெயில்வேயில் பிரத்யேகமாக அனுமதி வாங்கி படத்தின் முக்கிய காட்சிகளை சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் படமாக்கவுள்ளனர்.

இப்படத்தில் ஆர்.கே. தீவிரவாத ஊடுருவலை தடுக்கும் முக்கிய அதிகாரியாக நடிக்கிறாராம். திரில்லர், காமெடி, செண்டிமெண்ட் படமாக உருவாகவிருக்கும் இப்படத்தில் நாசர், ரமேஷ்கண்ணா, சிங்கமுத்து, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. 


Post your comment





Related News
வைகைப்புயல் வடிவேலு அவர்களுக்கு ஒரு திறந்த கடிதம்...!
வைகை எக்ஸ்பிரஸ் படத்தின் தபால்தலை வெளியீடு! நடிகர் ஆர் கே யின் புது முயற்சி...
எல்லாம் அவன் செயல் படத்தை விட பத்து மடங்கு விறுவிறுப்பாக இருக்கும் வைகை எக்ஸ்பிரஸ்! - நடிகர் ஆர்கே
வைகை எக்ஸ்பிரஸ்..ட்ருலைஸ் படத்தின் காப்பியா?
ஆர்.கேவை வைத்து ஷாஜி கைலாஷ் இயக்குவது சுரேஷ்கோபி பட ரீமேக் தானா..?
வைகை எக்ஸ்பிரஸ் பூஜை - வராமல் டிமிக்கி கொடுத்த இனியா
பேமிலி இமேஜ் தேவையில்லை- சுவாசிகா
தமிழில் ரீமேக் ஆகும் தெலுங்கு வேங்கடாத்திரி எக்ஸ்பிரஸ்
சென்னை எக்ஸ்பிரஸ்,க்ரீஷ் 3 வசூலை முறியடித்தது ‘தூம் 3’..!
சல்மான்கானின் படத்துக்கு நாமம் போட்ட‌ ஷாருக்கானின் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions