ஓட்டுக்கு பணம் கொடுப்பது ஜனநாயகத்துக்கு தீமை: வைரமுத்து பேச்சு

Bookmark and Share

ஓட்டுக்கு பணம் கொடுப்பது ஜனநாயகத்துக்கு தீமை: வைரமுத்து பேச்சு

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை தலைவராக கொண்டு செயல்படும் ‘எழுத்து’ தமிழ் இலக்கிய அமைப்பு சார்பில், தஞ்சை கவிராயர் எழுதிய ‘கைராட்டை கோபம்’, கவிஞர் ஜெயதேவன் எழுதிய ‘அம்மாவின் கோலம்’ ஆகிய நூல்களின் 2-ம் கட்ட வெளியீட்டு விழா கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள பாரதீய வித்யாபவனில் நடைபெற்றது.

விழாவில் ப.சிதம்பரம் பேசும்போது கூறியதாவது:-

தமிழ் நூல்களை அதிகம் பேர் வாங்கினால்தான் பிரசுரிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பிரசுரிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால்தான் தமிழ் எழுத்தாளர்களுக்கு ஊக்கம் கிடைக்கும். இதுவும் ஒரு சந்தை பொருளாதாரம்தான். தமிழ் இலக்கிய நூல்களை அதிகம்பேர் வாங்க வேண்டும். எழுத்து இலக்கிய அமைப்பின் சேவைப்பணிகள் தொடரும்.

இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.

விழாவில் கவிஞர் வைரமுத்து பேசும்போது கூறியதாவது:-

இலக்கியவாதிகளின் எண்ணிக்கை குறைவதாக இங்கு சுட்டி காண்பித்தனர். உலோகத்தில் தங்கம் குறைவாக கிடைப்பதனால்தான் மதிப்பு மிகுந்து விளங்குகிறது. அதுபோல் இலக்கியவாதிகள். குறைவான எண்ணிக்கையில் இருந்தாலும் அவர்கள் எப்போதும் போற்றப்படுவார்கள். 8 கோடி தமிழ் மக்களுக்காக எழுத்தாளர்கள் எழுதவில்லை. எதிர்கால சந்ததிகளான 800 கோடி மக்களுக்காகத்தான் எழுதுகிறார்கள். எனவேதான் எழுத்தாளர்கள் சோர்வடைவதில்லை.

தமிழ்பசி, இலக்கிய பசி நம் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும். தமிழுக்கு விரோதபோக்கு தொழில்நுட்பத்திலும், உலகமயமாதலிலும், சந்தைப்பொருளாதாரத்திலும்தான் ஆரம்பிக்கிறது. மொழியின் பாரம்பரியத்தை உணர்ந்து எழுதினால்தான் சிறந்த எழுத்தாளராக முடியும்.

தொழிலாளி தொடர்பாக ஒருவர் எழுதிய கவிதை எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு தொழிற்சாலையில் போனஸ் வழங்குவது தொடர்பாக போராட்டம் நடைபெறுகிறது.

இறுதியில் ஒப்பந்தம் செய்யப்படுகிறது. அப்போது ஒரு தொழிலாளி மட்டும் போனஸ் வாங்க மறுக்கிறார். ‘நீங்கள் போடும் சில எலும்பு துண்டுகள்தான் இது. அதுவும் எங்கள் உடம்பில் இருந்து எடுக்கப்பட்டதுதானே?’ என்று அந்த தொழிலாளி கேட்கிறார்.

இதுபோல்தான் ஓட்டுக்கு பணம் கொடுப்பது ஜனநாயகத்துக்கு தீமையை விளைவிக்கும். ஜனநாயகம் தான் மற்ற ஆட்சிகளை விட குறைந்த தீமையை கொண்டது என்பார்கள். ஆனால் பெரிய தீமைக்கு அது வழிவகுத்து விடக்கூடாது. ஓட்டுக்கு பணம் கொடுப்பதை அறம் சார்ந்தவர்களும், அறிவு ஜீவிகளும் விரும்புவதில்லை.

இவ்வாறு கவிஞர் வைரமுத்து பேசினார்.

இந்த விழாவில் கவிஞர்கள் மரபின் மைந்தன் முத்தையா, சிற்பி பாலசுப்பிரமணியம், எழுத்தாளர்கள் சா.கந்தசாமி, ம.ராஜேந்திரன் மற்றும் கார்த்தி சிதம்பரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Post your comment

Related News
கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி
அப்போது துணிச்சல் இல்லை - இப்போது பயம் இல்லை : சின்மயி
திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்துக்குக் கலைஞர் பெயரைச் சூட்டுங்கள் கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்..!
கலைஞர் புகழ் வணக்கம் கலைஞருக்குக் கவிஞர் வைரமுத்து நினைவேந்தல்..!
இந்தியா எழுந்து நின்று அழுகிறது வாஜ்பாய் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து இரங்கல்..!
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
காலத்தை வென்று நிற்பார் கலைஞர் - கவிப்பேரரசு வைரமுத்து
மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் வெற்றிக்கூட்டணி..!
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
அஜித் படத்தை இயக்கிய இயக்குனர் செல்லா-வின் அடுத்த படம்..!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions