இணையதளம் தொடங்கும் வைரமுத்து!

Bookmark and Share

இணையதளம் தொடங்கும் வைரமுத்து!

பல நட்சத்திர நடிகர்கள் நடிகைகள் ஆர்வத்தில் தங்களுக்கென இணையதளம் தொடங்கினாலும் பலவும் அப்டேட் செய்யாமல் தொடங்கியது போல அப்படியே இருந்து கொண்டு பல்லைக் காட்டுகின்றன. சிலர் மட்டுமே தங்கள் தளங்களில் ரசிகர்களின் ஃபேன் க்ளப்பில் தீவிர ஆர்வம் காட்டுகின்றனர்.

அதிகப்படங்கள் இல்லாத ஓய்வு நிலையில் இருக்கும் இளையராஜாவின் ரசிகர்கள் தளம் அண்மையில்  பெரிய வெற்றி பெற்றுள்ளது. காரணம் அதில் அவர் காட்டிய ஆர்வமும் கொடுத்த ஊக்கமும் தான் ஜூன்- 2ல் பிறந்தநாளில் அவருக்கு இணைய உலகில் வாழ்த்துக்கள் குவிந்தன.

ஜூன் -3ல் பிறந்தநாள் கொண்டாடிய கருணாநிதி ஹைடெக் உலகில் தன்னை இணைத்து எக்கச்சக்க இணைய வாழ்த்துகளைப் பெற்று அசத்தினார். இதுநாள் வரை இவ்வளவு பாடல்கள் படைப்புகள் என்று எழுதியுள்ள வைரமுத்து தனக்கென அதிகாரபூர்வ இணையதளம் தொடங்காமல் இருந்தார்.

அதைப்பற்றிக் கேட்ட போதெல்லாம் ஆர்வம் காட்டாமல் இருந்தார். இவ்வளவு அறிவியல் பற்றி எழுதினாலும் விர்ச்சுவல் உலகம் பற்றி விருப்பம் இல்லாமலே இருந்தவர், மேற்கண்ட இரு நிகழ்வுகளால் தனக்கென தனியான தளம் தொடங்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறாராம்.

அதற்கான முடிவினை எடுத்து விட்டாராம். ட்விட்டர் வரை இப்போது வந்துள்ள வைரமுத்து. இனி சொந்த தளத்ததில் முத்திரை பதிக்கப் போகிறார் என்று நம்பலாம். கவிதை, பாடல், நாவல்.கட்டுரை மட்டுமல்ல இப்போது சிறுகதைகளிலும் முத்திரை பதித்து வருகிற அவர், தனக்கான இணைய தளத்தை தன் மகன் மதன் கார்க்கியை வைத்தே  வடிவமைத்து தொடங்க இருக்கிறாராம்.

 


Post your comment





Related News
திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்துக்குக் கலைஞர் பெயரைச் சூட்டுங்கள் கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்..!
கலைஞர் புகழ் வணக்கம் கலைஞருக்குக் கவிஞர் வைரமுத்து நினைவேந்தல்..!
இந்தியா எழுந்து நின்று அழுகிறது வாஜ்பாய் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து இரங்கல்..!
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
காலத்தை வென்று நிற்பார் கலைஞர் - கவிப்பேரரசு வைரமுத்து
மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் வெற்றிக்கூட்டணி..!
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
அஜித் படத்தை இயக்கிய இயக்குனர் செல்லா-வின் அடுத்த படம்..!
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions