கவிப்பேரரசு வைரமுத்து யாழ்ப்பாணத்தில்

Bookmark and Share

 கவிப்பேரரசு வைரமுத்து யாழ்ப்பாணத்தில்

இலங்கை சென்றுள்ள கவிஞர், பாடலாசிரயர் கவிப்பேரரசு வைரமுத்து வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை நேற்று  சந்தித்து கலந்துரையாடினார்.

வட மாகாணத்திற்கு நேற்று (வெள்ளிக்கிழமை) சென்ற வைரமுத்து, யாழ். கோவில் வீதியில் அமைந்துள்ள வடமாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் முதலமைச்சரைச் சந்தித்தார்.  நேற்று இரவு 7.00 மணியளவில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.  

இதன்போது, வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் உடனிருந்தார்.

இந்த சந்திப்பின் போது, கவிஞர் வைரமுத்து, முதலில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

அதனைத் தொடர்ந்து, வடமாகாண முதலமைச்சர் கவிஞர் வைரமுத்துவிற்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடன், பனை ஓலையினால் செய்யப்பட்ட மாலையையும் அணிவித்தார்.

பின்னர் கவிஞர் வைரமுத்து, தான் எழுதிய கவிதைத் தொகுப்பு நூல் ஒன்றினை முதலமைச்சருக்கு வழங்கியதுடன், யாழ்.பொது நூலகத்திற்கும் ஒரு தொகுதி நூலினை அன்பளிப்பாக வழங்கினார்.  

தென்னாசியாவில் மிகப்பெரும் நூலகமான இப்பொது நூலகமே 1981ம் ஆண்டு சிங்கள அரச பயங்கரவாதத்தால் முற்றாக எரித்து நாசமாக்கப்பட்டது.  

இதில் 2000 ஆண்டுகள் பழமையான தமிழர்களின் வரலாற்று தொன்மைகள் அடங்கிய ஓலைச் சுவடிகளும், இலட்சக்கனக்கான நூல்களும் எரித்து நாசமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இன்று சனிக்கிழமை 2009ம்  ஆண்டு  இறுதி யுத்தம் நடந்த முல்லைத்தீவில் நடைபெறவுள்ள பொங்கல் விழாவில் கலந்து கொள்ளும் பொருட்டே வைரமுத்து இலங்கை சென்றுள்ளமை  குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி
அப்போது துணிச்சல் இல்லை - இப்போது பயம் இல்லை : சின்மயி
திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்துக்குக் கலைஞர் பெயரைச் சூட்டுங்கள் கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்..!
கலைஞர் புகழ் வணக்கம் கலைஞருக்குக் கவிஞர் வைரமுத்து நினைவேந்தல்..!
இந்தியா எழுந்து நின்று அழுகிறது வாஜ்பாய் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து இரங்கல்..!
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
காலத்தை வென்று நிற்பார் கலைஞர் - கவிப்பேரரசு வைரமுத்து
மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் வெற்றிக்கூட்டணி..!
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
அஜித் படத்தை இயக்கிய இயக்குனர் செல்லா-வின் அடுத்த படம்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions