13-ந்தேதி மதுரையில் கவிஞர் வைரமுத்து பிறந்தநாள் விழா!

Bookmark and Share

13-ந்தேதி மதுரையில் கவிஞர் வைரமுத்து பிறந்தநாள் விழா!

வெற்றித்தமிழர் பேரவை ஜூலை 13-ந் தேதி கவிஞர் வைரமுத்து பிறந்தநாளை கவிஞர்கள் திருநாள் என்று கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டுக்கான பிறந்தநாள் விழா ஜூலை 13-ந் தேதி (புதன்கிழமை) மாலை 6 மணி அளவில் மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெற உள்ளது.

விழாவுக்கு உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் தலைமை தாங்குகிறார். சினிமா டைரக்டர் பாரதிராஜா, மரபின் மைந்தன் முத்தையா, பேராசிரியை விஜயசுந்தரி ஆகியோர் வாழ்த்தி பேசுகிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் தன்னுடைய பிறந்தநாள் அன்று ஒரு கவிஞரைத் தேர்வுசெய்து அவருக்கு கவிஞர்கள் திருநாள் விருது வழங்கி பாராட்டி வருகிறார் கவிஞர் வைரமுத்து.

வெற்றித்தமிழர் பேரவையினால் வழங்கப்படும் இந்த விருதினை கவிஞர்கள் சுரதா, நா.காமராசன், சிற்பிபாலசுப்ரமணியன், முத்துலிங்கம், கே.சி.எஸ்.அருணாசலம், முகவை ராஜமாணிக்கம், பூவை செங்குட்டுவன், இன்குலாப், காசி ஆனந்தன், வெண்ணிலா, கலாப்ரியா, ஈரோடு தமிழன்பன், தமிழச்சி தங்கப்பாண்டியன், இளம்பிறை, இந்திரன், ஆண்டாள் பிரியதர்ஷினி, இளையபாரதி, விக்ரமாதித்யன், கல்யாண்ஜி, சல்மா உள்ளிட்ட பல கவிஞர்கள் பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டு அந்த விருது ஈழத்து கவிஞர்கள் 2 பேருக்கு வழங்கப்படுகிறது. 2016-ம் ஆண்டுக்கான கவிஞர்கள் திருநாள் விருதுக்கு எழுகலை இலக்கிய பேரவையால் தேர்வு செய்யப்பட்ட ஈழத்து கவிஞர்கள் ஜமீல் மற்றும் நவ்பல் இருவருக்கும் தலா ரூபாய் 50 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சம் பணமுடிப்பும், பட்டயமும் வழங்கப்படுகிறது.

மேலும் மதுரை, தேனி மாவட்டங்களில் தமிழ் வழிக் கல்வியில் பயின்ற ஏழை மாணவர்களுக்கு கவிஞர் வைரமுத்து கல்வி அறக்கட்டளையின் சார்பில் உயர்கல்விக்கு நிதி உதவியும் வழங்கி வைரமுத்து சிறப்புரையாற்றுகிறார்.

வெற்றித்தமிழர் பேரவையின் மதுரை மாவட்ட தலைவர் ஜெ.சுரேஷ் தலைமையில் அபிநாத்சந்திரன், ஏ.ஆர்.டி. நாகராஜன், பொறியாளர் பகவதிராஜன், பாலராமலிங்கம், பேரா.நம்.சீனிவாசன், ஞா.சந்திரன், டாக்டர் செல்வராஜ், அம்மா மெஸ் செந்தில், கோவிந்தராம், அழகர், செந்தில் கணேஷ், சிவகாசி ரவி உள்ளிட்ட குழுவினர் விழா ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.


Post your comment

Related News
தமிழாற்றுப்படை வரிசையில் தொல்காப்பியர் கவிஞர் வைரமுத்து அரங்கேற்றுகிறார்!
இயக்குநர் சி.வி.ராஜேந்திரன் மறைவு - கவிஞர் வைரமுத்து இரங்கல்
தமிழ் சமூகம் என்னை சந்தேகப்படலாமா? கவிஞர் வைரமுத்து வேதனை
வைரமுத்துவின் பிச்சையில் வளர்ந்தவர் ரஜினி, இப்படி செய்யலாமா? - சீமான் ஆவேச பேச்சு.!
வைரமுத்துவுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களிடம் சீமான் எழுப்பிய கேள்வி !
ஆண்டாள் குறித்து சர்ச்சை கருத்து: கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக வழக்குப்பதிவு
தகுதி மிக்கவர் கைகளிலேயே இந்த சமூகம் இயங்க வேண்டும் - வைரமுத்து
தி.மு.க தலைவர் கருணாநிதியுடன்-ரஜினி சந்திப்பு
கலையுடன் கூடிய அரசியல் சரித்திரம் மரணத்தில் முடிந்தது: மறைந்த ஜெயலலிதாவுக்கு வைரமுத்து இரங்கல்
கபாலி ஒரு தோல்வி படம் வைரமுத்து ஓபன்டாக்!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions