மலேசிய மண்ணை மேம்படுத்தியதில் தமிழ் மக்களுக்கு பெரும்பங்கு உண்டு: கவிஞர் வைரமுத்து பேச்சு

Bookmark and Share

மலேசிய மண்ணை மேம்படுத்தியதில் தமிழ் மக்களுக்கு பெரும்பங்கு உண்டு: கவிஞர் வைரமுத்து பேச்சு

இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான மலேசிய சிறப்பு தூதர் டத்தோஸ்ரீ சாமிவேலு எழுதிய ‘யாதுமாகி’ என்ற நூல் வெளியீட்டு விழா மலேசியா நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் நடந்தது. விழாவில் மலேசிய சுகாதாரத்துறை மந்திரி டத்தோஸ்ரீ சுப்ரமணியன் நூலை வெளியிட, கவிஞர் வைரமுத்து அதன் பிரதியை பெற்றுக்கொண்டார்.

விழாவில், கவிஞர் வைரமுத்து பேசியதாவது:-

மேடுபள்ளம் நிறைந்த மலேசிய மண்ணை மேம்படுத்தியதில் தமிழ் மக்களின் வேர்வைக்கும், ரத்தத்திற்கும் பெரும்பங்கு உண்டு. இந்த மண்ணில் நிலையாக இல்லாத நிலவியலை தங்கள் உழைப்பால் ஒழுங்கு செய்தவர்கள் தமிழர்கள். மரங்களும், மலர்களும் முகம் பார்க்கும் தரைக்கண்ணாடி போல தார்ச்சாலை அமைத்தவர் டத்தோஸ்ரீ சாமிவேலு.

பொதுப்பணித்துறையில் இருந்து அவர் தொலைதொடர்புத் துறைக்கு மாற்றப்பட்டார். அந்தத் துறையிலும் அவர் சாதித்து முடித்தார். கடலில் தூக்கி எறிந்தாலும் வாயில் ஒரு மீனைக் கவ்விக்கொண்டு கரையேறும் சாமர்த்தியம் சாமிவேலுவுக்கு உண்டு.

இந்தியாவில் தொலைதொடர்புத் துறை ராஜீவ் காந்திக்கு கடன்பட்டிருப்பது போலவே, மலேசியாவின் தொலைதொடர்புத் துறை டத்தோஸ்ரீ சாமிவேலுவுக்கு கடன்பட்டிருக்கிறது. இன்றுவரைக்கும் அவர் போராளியாக திகழ்கிறார். அவரை அம்பு செலுத்தி யாரும் வீழ்த்திவிட முடியாது. ஆனால் அன்பு செலுத்தினால் வீழ்த்திவிடலாம்.

சாமிவேலு இன்றைக்கு 80 வயதை தொட்டு இருக்கிறார். ஒவ்வொரு பத்து வயதுக்கும் ஒரு குறிக்கோள் இருக்கிறது. 20 வயது என்பது கற்க. 30 வயது துய்க்க. 40 வயது உழைக்க. 50 வயது நிலைக்க. 60 வயது கொடுக்க, 70 வயது சிந்திக்க. இந்த 80 வயது என்பது மன்னிக்க.

டத்தோஸ்ரீ சாமிவேலுக்கு இது மன்னிக்கும் வயது. அரசியலில் நீங்கள் யாருக்காவது துன்பம் தந்திருந்தால் அவர் களை அழைத்து மன்னிப்புக் கேளுங்கள். அரசியலில் உங்களுக்கு யாராவது துன்பம் தந்திருந்தால் அவர்களை மன்னித்து விடுங்கள். வெற்றி பெற்றவன்தான் மன்னிப்பான். மன்னிப்பும் கேட்பான். நீங்கள் வெற்றி பெற்றவர்.

மன்னிப்புக் கேளுங் கள் மற்றும் மன்னித்துவிடுங் கள். உங்கள் ஆட்சி காலத்தில் மலேசியா எங்கும் தமிழ்ப்பள்ளிகளை வளர்த்தெடுத்த செயலைத்தான் உங்கள் வாழ்நாள் சாதனையாக கருதுவேன்.

இவ்வாறு கவிஞர் வைரமுத்து பேசினார்.

இந்த விழாவை மலேசிய இளைஞர் விளையாட்டுத்துறை துணை மந்திரி டத்தோ எம்.சரவணன் ஏற்பாடு செய்திருந்தார். டத்தின்ஸ்ரீ இந்திராணி சாமிவேலு, சினிமா டைரக்டர் பாரதிராஜா, பாடலாசிரியர்கள் ரவிபாரதி, விவேகா ஆகியோரும் விழாவில் பங்குபெற்றனர்.


Post your comment





Related News
தமிழாற்றுப்படை வரிசையில் தொல்காப்பியர் கவிஞர் வைரமுத்து அரங்கேற்றுகிறார்!
இயக்குநர் சி.வி.ராஜேந்திரன் மறைவு - கவிஞர் வைரமுத்து இரங்கல்
தமிழ் சமூகம் என்னை சந்தேகப்படலாமா? கவிஞர் வைரமுத்து வேதனை
வைரமுத்துவின் பிச்சையில் வளர்ந்தவர் ரஜினி, இப்படி செய்யலாமா? - சீமான் ஆவேச பேச்சு.!
வைரமுத்துவுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களிடம் சீமான் எழுப்பிய கேள்வி !
ஆண்டாள் குறித்து சர்ச்சை கருத்து: கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக வழக்குப்பதிவு
தகுதி மிக்கவர் கைகளிலேயே இந்த சமூகம் இயங்க வேண்டும் - வைரமுத்து
தி.மு.க தலைவர் கருணாநிதியுடன்-ரஜினி சந்திப்பு
கலையுடன் கூடிய அரசியல் சரித்திரம் மரணத்தில் முடிந்தது: மறைந்த ஜெயலலிதாவுக்கு வைரமுத்து இரங்கல்
கபாலி ஒரு தோல்வி படம் வைரமுத்து ஓபன்டாக்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions