20 படங்களுக்கு பாடல் எழுதுகிறார் வைரமுத்து

Bookmark and Share

20 படங்களுக்கு பாடல் எழுதுகிறார் வைரமுத்து

கவிஞர் வைரமுத்து தற்போது 20 படங்களுக்கு பாடல் எழுதி வருகிறார். இதில் சிறப்பு என்னவென்றால் 20 படங்களின் அனைத்து பாடல்களையும் அவரே எழுதுகிறார். கவிஞர் வைரமுத்து சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முடிவெடுத்த்தார்.

அதாவது எந்த படத்திற்கு பாட்டு எழுதினாலும் அதில் அனைத்து பாட்டையும் எழுதுவது என்பது முடிவு. பாடல்களின் சூழலை மட்டும் கேட்டுவிட்டு அந்த சூழலுக்கு பாட்டு எழுதுவதை விட முழு கதையையும் கேட்டு அந்த கதைக்குள் இருந்து பாடல்கள் எழுதுவது சுலபமானது என்பதோடு நல்ல பாடல்கள் பிறக்கும் என்பது அவரது கருத்து.

அந்த அடிப்படையில் அவர் அனைத்து பாடல்களையும் எழுதுகிறார் சமீபத்தில் வெளிவந்த மணிரத்னத்தின் ஓகே கண்மணி படத்தில் அனைத்தும் பாடல்களையும் அவரே எழுதியிருந்தார் ஒரே ஒரு பாடல் மட்டும் அவர் அமெரிக்கா சென்றிருந்தபோது மணிரத்னம் எழுதினார்.

தற்போது வைரமுத்து,  விஜய்யின் புலி, கமலின் தூங்காவனம், சூர்யாவின் 24, விஷாலின் பாயும்புலி, கார்த்திக்கின் காஷ்மோரா, விக்ரம் பிரபுவின் வாகா, விஜய் சேதுபதியின் இடம் பொருள் ஏவல் உள்பட 20 படங்களுக்கு பாடல் எழுதுகிறார்.

தலைமுறை கடந்தும் தனது நட்சத்திர பாடலாசிரியர் இமேஜை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் வைரமுத்து. 


Post your comment





Related News
திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்துக்குக் கலைஞர் பெயரைச் சூட்டுங்கள் கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்..!
கலைஞர் புகழ் வணக்கம் கலைஞருக்குக் கவிஞர் வைரமுத்து நினைவேந்தல்..!
இந்தியா எழுந்து நின்று அழுகிறது வாஜ்பாய் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து இரங்கல்..!
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
காலத்தை வென்று நிற்பார் கலைஞர் - கவிப்பேரரசு வைரமுத்து
மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் வெற்றிக்கூட்டணி..!
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
வைரமுத்து எழுதிய பாடலை ரம்யா நம்பீசன் பாடினார்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions