தமிழ் கலாசாரத்தை காப்பாற்ற வேண்டும்: கவிஞர் வைரமுத்து பேச்சு

Bookmark and Share

தமிழ் கலாசாரத்தை காப்பாற்ற வேண்டும்: கவிஞர் வைரமுத்து பேச்சு

தமிழ் திரைப்படத் துறை சார்பில் தேசிய விருதுகள் பெற்றுள்ள கவிஞர் வைரமுத்து, டைரக்டர் ராஜூமுருகன், பின்னணி பாடகர் சுந்தரய்யர், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, தனஞ்செயன் உள்ளிட்டோருக்கு சென்னை வடபழனியில் நேற்று பாராட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டு பேசியதாவது:-

நாங்கள் பெற்றுள்ள தேசிய விருதுகளை தமிழர்களுக்கு கிடைத்த பெருமையாக கருதுகிறோம். விருது என்பது திறமையின் அளவுகோல் அல்ல. எங்களைவிட அறிவாளிகள், மேதைகள், விற்பன்னர்கள் நிறையபேர் இந்த சினிமா துறையில் இருந்து இருக்கிறார்கள். அவர்கள் பெறாத விருதுகளை விளம்பர வெளிச்சம் எங்களுக்கு பெற்று தந்து இருக்கிறது.

நான் 7 விருதுகள் பெற்றுவிட்டேன். என்னை பார்த்து உங்களுக்கு எதற்கு இத்தனை விருதுகள் என்று கேட்கிறார்கள். அவர்கள் கொடுக்கிறார்கள். நான் வாங்கிக்கொள்கிறேன். தமிழர்கள் தாக்கப்படுவதும், ஒதுக்கப்படுவதுமாக இருக்கிற இன்றைய சூழ்நிலையில், இப்படி ஐந்தாறு தேசிய விருதுகளை தமிழர்கள் பெற்றார்கள் என்பது நேர்மறை சிந்தனை.

தேசிய விருதுக்கு வந்த 434 படங்களை வடிகட்டி, 86 படங்களாக குறைத்து அதில் இருந்து விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்து உள்ளனர். நான் கிராமத்தில் இருந்து வந்துதான் பாட்டு எழுத தொடங்கினேன்.


Post your comment





Related News
தட்டி தூக்கிய கபிலன் வைரமுத்துவிற்கு முருகன் மந்திரம் பாராட்டு
திரையுலக ஜாம்பவானுக்கு சிலை வைக்கும் வைரமுத்து
திரைப்பட தேசிய விருதுகளை வழங்கினார் பிரணாப் முகர்ஜி: ராஜூ முருகன், வைரமுத்து விருதுகளை பெற்றனர்
கவிஞர் வைரமுத்து 'ஜெட்லி' ஆடியோ வெளியீட்டில் சொன்ன ரகசியம் என்ன? - வீடியோ
கொடி கம்பங்கள் கூட ஆடை கட்டி உள்ளது: விவசாயிகளால் ஆடை கட்ட முடியவில்லை - வைரமுத்து
தலைமை ஆசிரியர் புகழ் பாடும் 'பள்ளிப் பருவத்திலே'-படம்
மதன் கார்க்கிக்கு அப்படியே நேர் எதிர் அப்பா வைரமுத்து
வைரமுத்துவிற்கு எத்தனையாவது தேசிய விருது தெரியுமா இது? சாதனை
நூலகங்களுக்கு நூல்கள் வாங்குவது தான் எழுத்தாளனுக்கு உண்மையான அஞ்சலி: கவிஞர் வைரமுத்து பேச்சு
அஜித், விஜய், சூர்யாவுக்கு ஹிட்கொடுத்த வைரமுத்துவுக்கு வந்த சோதனை ! அதிர்ச்சி தகவல்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions