வைரமுத்துவின் சிறுகதைகள் சர்வதேச புத்தக திருவிழாவில் அறிமுகம்

Bookmark and Share

வைரமுத்துவின் சிறுகதைகள் சர்வதேச புத்தக திருவிழாவில் அறிமுகம்

ஷார்ஜாவில் 34-வது சர்வதேச புத்தக திருவிழாவை ஷார்ஜா அரசு கொண்டாடுகிறது.

ஷார்ஜா மன்னர் ஷேக் சுல்தான் பின் முகமது ஏற்பாடு செய்திருக்கும் புத்தக திருவிழாவில் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை வைரமுத்து சிறுகதைகள் நூல் அறிமுகம் செய்யப்படுகிறது. 

ஐக்கிய அரபு நாடுகளுக்கான இந்திய தூதர் சீதாராம், வைரமுத்து சிறுகதைகள் நூலை அறிமுகம் செய்து பேசுகிறார். கவிஞர் வைரமுத்து சிறப்புரையாற்றுகிறார். 60 நாடுகளிலிருந்து 1250 பதிப்பாளர்கள் பங்குபெறும் ஷார்ஜா சர்வதேச புத்தக திருவிழாவில் ஆண்டுதோறும் 14 லட்சம் பார்வையாளர்கள் பங்கு பெறுகிறார்கள். 

வாசிப்பு கலாசாரத்தை மேம்படுத்தும் இந்த புத்தக திருவிழா உலக இலக்கியவாதிகளின் சந்திப்பு மையமாகவும் விளங்குகிறது. கடந்த ஆண்டுகளில் நடந்த புத்தக திருவிழாக்களில் டான் பிரவுன், அருந்ததிராய், அப்துல்கலாம், சேத்தன்பகத், எம்.டி.வாசுதேவன் நாயர், ஓ.என்.வி.குரூப், ரஸ்கின் பாண்ட், டெர்ரி ஓ பிரெய்ன் ஆகிய உலக புகழ்மிக்க படைப்பாளிகள் கலந்துகொண்டனர். இந்த ஆண்டு சிறப்பு விருந்தினராக கவிஞர் வைரமுத்து கலந்து கொள்கிறார். 

உலகச் சிறுகதைகள் குறித்தும், தொழில்நுட்ப யுகத்தில் இலக்கியத்தின் தேவை குறித்தும் கவிஞர் வைரமுத்து சிறப்புரையாற்றுகிறார். சர்வதேச புத்தக திருவிழாவில் கலந்துகொள்வதற்காக இன்று(வியாழக்கிழமை) காலை விமானத்தில் கவிஞர் வைரமுத்து துபாய் பயணமாகிறார்.

15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு விமானத்தில் சென்னை திரும்புகிறார்.


Post your comment





Related News
திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்துக்குக் கலைஞர் பெயரைச் சூட்டுங்கள் கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்..!
கலைஞர் புகழ் வணக்கம் கலைஞருக்குக் கவிஞர் வைரமுத்து நினைவேந்தல்..!
இந்தியா எழுந்து நின்று அழுகிறது வாஜ்பாய் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து இரங்கல்..!
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
காலத்தை வென்று நிற்பார் கலைஞர் - கவிப்பேரரசு வைரமுத்து
மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் வெற்றிக்கூட்டணி..!
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
வைரமுத்து எழுதிய பாடலை ரம்யா நம்பீசன் பாடினார்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions