கவிப்பேரரசு வைரமுத்து மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!

Bookmark and Share

கவிப்பேரரசு வைரமுத்து மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!

கடந்த மாதம் 12-ம் தேதி, மறைந்த நீதிபதி கைலாசத்தின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவையொட்டி தபால் தலை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் வைரமுத்து, நீதிபதிகள் குறித்து கருத்து தெரிவித்து இருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், சினிமா ஃபைனான்சியர் முகுன் சந்த் போத்ரா மனு தாக்கல் செய்தார்.அந்த மனுவில், "நீதித்துறை, நீதிபதிகள் குறித்து விமர்சனம் செய்த வைரமுத்து மீது கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த மனு விசாரணைக்கு உகந்ததா, இதற்கு அட்வகேட் ஜெனரலிடம் முன் அனுமதி பெற வேண்டுமா என்பது குறித்து முடிவு எடுப்பது குறித்து இன்று விசாரணை நடைபெற்றது. இதுபற்றி விசாரணை செய்த நீதிபதிகள் அக்னி கோத்திரி, கே.கே. சசிதரன் ஆகியோர், “இந்த மனுவுடன் இணைத்துள்ள சி.டி.யை போட்டு பார்த்தோம்.

இந்த மனு விசாரணைக்கு உகந்ததுதான். எனவே, இந்த வழக்கு மனுவை எண்ணிட்டு, விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிடுகிறோம்" என பதிவுத்துறைக்கு உத்தரவிட்டனர். பிரபல கவிஞர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Post your comment





Related News
திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்துக்குக் கலைஞர் பெயரைச் சூட்டுங்கள் கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்..!
கலைஞர் புகழ் வணக்கம் கலைஞருக்குக் கவிஞர் வைரமுத்து நினைவேந்தல்..!
இந்தியா எழுந்து நின்று அழுகிறது வாஜ்பாய் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து இரங்கல்..!
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
காலத்தை வென்று நிற்பார் கலைஞர் - கவிப்பேரரசு வைரமுத்து
மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் வெற்றிக்கூட்டணி..!
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
வைரமுத்து எழுதிய பாடலை ரம்யா நம்பீசன் பாடினார்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions