மணிரத்னத்துக்கு ஆலோசனை சொன்ன வைரமுத்து

Bookmark and Share

மணிரத்னத்துக்கு ஆலோசனை சொன்ன வைரமுத்து

மணிரத்னம் கடைசியாக இயக்கி வெளிவந்த “ஆய்த எழுத்து, ராவணன், கடல்” ஆகிய படங்கள் பெரிய அளவில் வசூலையோ, பெயரையோ அவருக்குப் பெற்றுத் தரவில்லை.

இருந்தாலும் மணிரத்னம் என்ற பெயரும் அவருடைய திறமை மீதும் திரைப்பட ரசிகர்களுக்கு எப்போதுமே தனி மதிப்பு உண்டு. 'ஆய்த எழுத்து' படத்தில் அரசியலையும், 'ராவணன்' படத்தில் மாற்றான் மனைவி மீதான காதலையும், 'கடல்' படத்தில் குழப்பமான காதலையும் கொடுத்து மணிரத்னம் கொஞ்சம் சறுக்கியிருந்தார் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய உண்மை.

தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாது இந்தியத் திரையுலகிலும் ஒரு புதிய அலையை ஏற்படுத்தியதில் மணிரத்னத்திற்கு மிகப் பெரிய பங்கு உண்டு. அப்படிப்பட்டவரின் படங்கள் வசூல் ரீதியாகவும், தரத்திலும் கொஞ்சம் குறைந்ததைக் கண்டு கவலைப்பட்ட வைரமுத்துதான் மணிரத்னதைச் சந்தித்து அவருடைய மிகப் பெரிய பலமே காதல் படங்கள்தான் என்றும், அதை மையமாக வைத்து அடுத்த படத்தை உருவாக்குங்கள் என்றும் ஆலோசனை சொல்லியிருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதன் பின்னர்தான் 'ஓ காதல் கண்மணி' கதையை மணிரத்னம் எழுதியிருக்கிறார். இன்று படத்தைப் பார்த்த பலரும் மீண்டும் மணிரத்னம் அவருடைய பாணியில் ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் என்று பாராட்டி வருகிறார்கள்.

தெலுங்கிலும் இந்தப் படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது என  டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மணிரத்னத்தை மீண்டும் அவருடைய பாணிக்கு அழைத்து வந்த வைரமுத்துவுக்குத்தான் ரசிகர்கள் முதல் நன்றியைச் சொல்ல வேண்டும்.


Post your comment





Related News
திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்துக்குக் கலைஞர் பெயரைச் சூட்டுங்கள் கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்..!
கலைஞர் புகழ் வணக்கம் கலைஞருக்குக் கவிஞர் வைரமுத்து நினைவேந்தல்..!
இந்தியா எழுந்து நின்று அழுகிறது வாஜ்பாய் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து இரங்கல்..!
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
காலத்தை வென்று நிற்பார் கலைஞர் - கவிப்பேரரசு வைரமுத்து
மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் வெற்றிக்கூட்டணி..!
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
வைரமுத்து எழுதிய பாடலை ரம்யா நம்பீசன் பாடினார்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions