தமிழனுக்கு கொம்பு முளைச்சிடுச்சு, அடுத்த போராட்டம்? வைரமுத்து சொன்னது

Bookmark and Share

தமிழனுக்கு கொம்பு முளைச்சிடுச்சு, அடுத்த போராட்டம்? வைரமுத்து சொன்னது

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக நிறைய ஹிட் பாடல்களை எழுதிக்கொடுத்தவர் கவிஞர் வைரமுத்து.

ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி பெற்று நிரந்தர சட்டம் வந்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

இனிமையான தமிழ் வார்த்தைகளால் இதயம் தொடும்படி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசிய வைரமுத்து தற்போது ட்விட்டர் பக்கத்தில் போராட்ட வெற்றி குறித்து தன் கருத்தை கவிதையாக வெளியிட்டுள்ளார்.

வாடிவாசல் திறந்துவிடும் என ஆரம்பித்தவர் கடைசியில் முடிக்கும் போது சாராயம் குறித்தும் ஆராய வேண்டும் என முடித்திருந்தார்.

வாடிவாசல் திறந்துவிடும்
வாழ்த்துகிறேன் தம்பி – இனி
கோடிவாசல் திறக்கும்உன்
கொள்கைகளை நம்பி

தலைவர்களே இல்லாத
கட்சியொன்று காட்டி – ஒரு
தலைமுறைக்கே வழிசொன்னீர்
தமிழினத்தைக் கூட்டி

அடையாளம் தொன்மங்கள்
அழிக்குமொரு கூட்டம் – உங்கள்
படையாழம் பார்த்தவுடன்
பயந்தெடுத்த தோட்டம்

பீசாவும் பெப்சியுமே
இளைஞர்கள் என்று – வாய்
கூசாமல் சொன்னவரைக்
கொன்றுவிட்டீர் கொன்று

சொல்வாங்கி எல்லாரும்
சூளுரைத்த பாட்டு - கடல்
உள்வாங்கிப் போனதடா
உங்கள்குரல் கேட்டு

ஒருகொம்பு ஆணென்றால்
மறுகொம்பு பெண்தான் – அந்த
இருகொம்பின் மத்தியிலே
இடுங்கியது மண்தான்


தண்பனியால் சுடுகதிரால்
தமிழினமா சாகும்? – அட
தண்ணீரில் வீழ்வதனால்
வெயில்நனைந்தா போகும்?

தெருவிருந்து போராடத்
திறம்தந்தார் தமக்கும் – உம்மைக்
கருவிருந்து பெற்றாரின்
கால்களுக்கும் வணக்கம்

சதுராடிக் களம்கண்ட
சகோதரிகாள் வணக்கம் – உங்கள்
எதிர்காலக் கருப்பைகள்
நெருப்பைத்தான் சுமக்கும்

காளைகளை மீட்டெடுக்கக்
களம்கண்ட கூட்டம் – இனி
நாளைகளை மீட்டெடுக்க
நாணில்அம்பு பூட்டும்

வரம்புகளை யார்விதித்தார்
வரட்டுமொரு யுத்தம் – எங்கள்
நரம்புகளில் ஓடுதடா
ராஜ ராஜ ரத்தம்

போராடிச் சாதித்துப்
புகழ்கொண்டீர் யாண்டும் – இனிச்
சாராயம் குறித்தும்நீர்
ஆராய வேண்டும்


Post your comment





Related News
அஜித், விஜய், சூர்யாவுக்கு ஹிட்கொடுத்த வைரமுத்துவுக்கு வந்த சோதனை ! அதிர்ச்சி தகவல்
தமிழ்நாட்டு அரசியலுக்கு வைரமுத்து சொன்ன திருக்குறள்
விவேகம் பற்றிய சுவாரஸ்ய தகவலை வெளியிட்ட கபிலன் வைரமுத்து
கவிஞர் வைரமுத்துவின் சிறுகதைகள் மலையாளத்தில் வெளியீடு
இந்த மாணவ சமூகத்தை என் தோளில் சுமந்து கொண்டாடுகிறேன்! - கவிஞர் வைரமுத்து
ஃபேஸ்புக், ட்விட்டருக்கு மாற்றாக புதியதோர் இணையம் செய்வோம்! - கபிலன் வைரமுத்து
மீண்டும் மாடு மேய்க்க போறேன் - நீயா நானா வைரமுத்து விருப்பம்
காளையை அடக்கிய சிவபெருமானை நீங்கள் கைது செய்ய முடியுமா? வைரமுத்து கொதிப்பு
நோபல் பரிசுபெற்ற பாப் டிலானுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து
ஜெயலலிதா பூரண நலம்பெற கவிஞர் வைரமுத்து வாழ்த்து







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions