வைரமுத்துவை மிகவும் தரக்குறைவான மோசமான வார்த்தையில் விமர்சித்த H.ராஜா

Bookmark and Share

வைரமுத்துவை மிகவும் தரக்குறைவான மோசமான வார்த்தையில் விமர்சித்த H.ராஜா

தமிழ் சினிமா என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் மெர்சல் படத்திற்கு பிரபல அரசியல் பிரமுகர் H.ராஜா செய்த வேலை எல்லாம் யாராலும் மறக்க முடியாது.

இந்நிலையில் வைரமுத்து எழுதிய ஒரு நூலில் ஆண்டாளை தேவதாசி என்று குறிப்பிட்டுள்ளதாக H.ராஜா சமீபத்தில் ஒரு மேடையில் மிகவும் மோசமாக பேசியுள்ளார்.

வைரமுத்துவை ஒருமையில் பேசியது மட்டுமின்றி அவர் தவறான குடும்பத்தில் பிறந்தவர், அதனால், தான் அப்படி எழுதியுள்ளார் என்று பேசி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

இதை தொடர்ந்து வைரமுத்து ‘தமிழை ஆண்டாள் என்ற எனது கட்டுரையில் அமெரிக்க இண்டியானா பல்கலைக்கழகத்தின் ஆய்வு நூலில் சொல்லப்பட்டிருந்த ஒரு வரியைத்தான் நான் மேற்கோள் காட்டியிருந்தேன்; அது எனது கருத்தன்று. ஓர் ஆய்வாளரின் தனிக்கருத்து.

ஆளுமைகளை மேன்மைப்படுத்துவதே இலக்கியத்தின் நோக்கமேயன்றி சிறுமை செய்வதன்று. அதற்கு இலக்கியமே தேவையில்லை. ஆண்டாளைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கும் என் கருத்துக்களெல்லாம் ஆண்டாளின் பெருமைகளையே பேசுகின்றன என்பதை அனைவரும் அறிவர். எவரையும் புண்படுத்துவது என் நோக்கமன்று; புண்பட்டிருந்தால் வருந்துகிறேன்’ என்று கூறியுள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions